Wednesday, 8 July 2015

குழந்தைகளை குடிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது தான் தமிழக அரசின் வாடிக்கையா - கரூரில் சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் கேள்வி

குழந்தைகளுக்கு மதுவை குடிக்க வைத்து அதனை பார்த்து ரசிக்கும் கொடூரம் தமிழகத்தில் தான் நடந்துள்ளது .இந்த கொடுமைக்கு பிறகாவது தமிழக அரசு இந்த மதுவிலக்கு கொள்கையிலே தீவிர கட்டுபாடுகளை கொண்டுவந்து படிப்படியாக மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் சி.ஜ.டி.யு மாநில தலைவர் சவுந்திரராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை.

கரூரி மாவட்ட ஊரகவளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்க கோரிக்கை மாநாடு தனியார் அரங்கில் சி.ஜ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலையில் நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த ஊரகவளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி.ஜ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது வரும் செப்டம்பர் 2 ஆம்தேதி நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் எங்கள சங்கமும் கலந்து கொள்ளும் மேலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த செய்து ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.இதில் தமிழக அரசு வெறும் 5% ஊதிய உயர்வு செய்து தொழிலாளர்களை ஏமாற்றி இருக்கிறது.அதற்காக தங்கள் கைவசம் இருக்கு ஆளுங்கட்சி சங்கங்ளை கொண்டு அந்த தொழிலாளர்களுக்கு ஒரு அநீதியை செய்திருக்கிறார்கள்.இதனால் அந்த தொழிலாளர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் அந்த கோபத்தினை விரைவில் வெளியே கொண்டு வருவார்கள்,கடந்த இரண்டு நாட்களாக குழந்தகளுக்கு மதுவை குடிக்க வைத்து அதனை பார்த்து ரசிக்கும் கொடூரம் நடந்துள்ளது.இந்த கொடுமைக்கு பிறகாவது தமிழக அரசு இந்த மதுவிலக்கு கொள்கையிலே தீவிர கட்டுபாடுகளை கொண்டுவந்து படிப்படியாக மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும்,இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய தீமையை தீங்கை இது விளைவித்து கொண்டிருக்கிறது சான்று தான் இது அதனால் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment