’துக்ளக்’ ஆசிரியர் சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரண மாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த நெசவாளர் தின விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, சோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும் ஆஸ்பத்திரிக்கு சென்று சோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் சோ.ராமசுவாமி இறந்துவிட்டதாக டுவிட் செய்துவிட்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இதைக்கண்ட பலரும் அதிர்ந்து விட்டனர். இதை தொடர்ந்து பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
khushbusundar
@khushsundar
Sad to hear the demise of #ChoRamasamy .may his soul rest in peace..
8:54 AM - 26 Sep 2015 ’
பின்னர் ஒருமணி நேரம் கழித்து அதற்கு குஷ்பு 1000 முறை மன்னிப்பு கேட்பதாகவும் அவர நீண்ட நாள் வாழ வேண்டும் எனவும் டுவிட் செய்தார்
khushbusundar
@khushsundar
I tweeted about #ChoRamasamy avl coz I was sent a link confirming his demise n if this untrue,my 1000 apologies. .may he live a long life.
9:50 AM - 26 Sep 2015
இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் அவர் நலமாக உள்ளார். உடல் நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment