Tuesday, 22 September 2015

பல மாணவர்களின் உயிரை வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம் – இப்ப விழுமா ? எப்ப விழுமா ? என்ற கேள்விக்குறி – அலட்சிய நிர்வாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை – கவனிக்குமா கரூர் நிர்வாகம்



கரூர் நகராட்சியானது தமிழகத்தின் மைய பகுதி மட்டுமில்லாமல், வணிகம், புராதானம், விவசாயம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது,. இப்படி பட்ட கரூர் நகராட்சியானது செல்வ செழிப்புடன் திகழ்ந்து வந்த நிலையில் இங்குள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவிப்பறிப்பை தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் கரூர் நகராட்சி துறை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் இருட்டடிப்பு செய்துள்ளது. அவரின் பதவிப்பறிப்பை தொடர்ந்தா ? என சமூக நல ஆர்வலர்களும், பல்வேறு கட்சியினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் கரூர் நகராட்சி நிர்வாகத்தின் முன்புறம் அமைந்துள்ள கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல வருடங்களாக பட்டுப்போன மரம் இன்னும் அகற்ற நிர்வாகத்தர்ப்பில் எந்த வித அக்கறையும் காட்ட வில்லை. இந்த நிலை நீடித்தால் இம்மரம் எப்போது வேண்டுமானாலும் விழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும் இம்மரம் விழும் போது இப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவர்களின் மண்டையை பதம் பார்ப்பதோடு, உயிர்ச் சேதாரமும் ஏற்படும் எனவே நகராட்சி நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த மரம் விழும் போது ஒன்று பள்ளி கட்டிடம் மேல் விழுந்து பள்ளி மாணவர்களை சேதப்படுத்தும் என்றும், மறு புறம் விழும் போது பத்திரப்பதிவு துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களையும் அருகில் இருக்கும் கடை வீதிகளில் வசிக்கும் பொதுமக்களின் மண்டையை எப்படியும் பதம் பார்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, உடனே கரூர் மாவட்ட நிர்வாகம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்
பேட்டி : முரளி – சமூக நல ஆர்வலர் – கரூர்

      ரவிச்சந்திரன் – பொது நல ஆர்வலர் - கரூர்

No comments:

Post a Comment