Wednesday 23 September 2015

இந்தியாவில் இளைஞர் சக்தி அதிகம் – சுற்றுப்புறத்தூய்மையில் தனி மனித ஈடுபாடு மிக, மிக குறைவு – சீனா சென்று திரும்பிய இந்திய பிரதிநிதி கரூர் மாணவி ஸ்ரீ நிதி கார்த்திகேயன் பேச்சு



இந்தியா – சீனா மாணவர்கள் கல்வி கருத்துணர்வு பகிர்தல் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து இந்திய நாட்டுக் குழுவாக குறளின் குறள், உத்திரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் ஏற்பாட்டில் தமிழ் நாட்டில் 3 பேர் உள்பட 19 பேர் கொண்ட குழுவினர் சீனா சென்று ஒரு வாரம் அங்குள்ள மாணவர்கள் குழுவுடன் கருத்துப் பரிமாற்றம் செய்தும், அங்கிருக்கும் கல்வி நிலையங்களை பார்வையிட்டும், அதிசயங்களில் ஒன்றான சீனா சுவர் போன்றவற்றையும், கலாச்சார நடன அரங்குகளையும் கண்டு, ஒரு வாரப்பயணத்திற்கு பின் இந்தியா திரும்பியுள்ளனர். இக்குழுவில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொண்ட மூன்று பேரில் ஒருவரான கரூர் பரணி பார்க் பள்ளி மாணவியான 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ நிதி கார்த்திகேயனும் ஆவார். இவருக்கான வரவேற்பு நிகழ்வு கரூர் திருக்குறள் பேரவை மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஹோட்டல் அர்ச்சனாவில் நடைபெற்றது.
கரூர் தமிழிசை சங்க நிறுவனரும், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஸ்ரீ நிதி கார்த்திகேயனின் தந்தையும், கரூர் தமிழிசைச் சங்க தலைவருமான கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பரணி பள்ளிக்குழுமங்களின் செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், ரோட்டரி சங்க தலைவர்கள் தங்கவேல், பாஸ்கரன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்கள். ஸ்ரீ நிதி கார்த்திகேயன் ஆற்றிய ஏற்புரையில், சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இளைஞர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு, ஆனால் இந்தியாவில் இளைஞரகளின் எண்ணிக்கை அதிகமாகும். சுற்றுச்சூழலில் சீனர்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். வாகனங்களில் புகையோ, சத்தமோ காண முடிவதில்லை. கல்வியைப் பொறுத்தவரை செயல் முறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மக்கள் அனைவரிடமும், அன்போடு பழகுகிறார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் உணவகங்கள் திறப்பது இல்லை, நம் நாட்டில் சைனீஸ் உணவாக சொல்லப்படும் எந்த ஒரு உணவும் அங்குள்ள உணவுப்பட்டியலில் இல்லை. ஆனால் அங்கு தரப்படும் உணவு சுவையாக உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் ஒரே சாலையில் பல வழி தொங்கு பாதை, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.  நடன நாடகங்களை தனி அரங்குகளில் நடத்துகிறார்கள். அந்த நாடகத்தில், நாடகத்தில் உள்ள பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடிகளை அணிந்து கொண்டு நடிக்கிறார்கள். இந்த நடனம் அந்த நாட்டில் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இந்த குழுவில் நான் இடம் பெற பெரிதும் துணை நின்ற பரணி பார்க் கல்வி குழுமம், மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அங்கு தமிழின் பெருமையை பறைசாட்டும் வகையில் எனக்கு தமிழும், ஆங்கிலத்திலும் உள்ள ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில உரையுடன் கூடிய கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் வழங்கிய திருக்குறள் நூல்களை அங்கு விளக்கம் சொல்லி வழங்கிய போது ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டார்கள் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்த ஸ்ரீ நிதி கார்த்திகேயனை பெற்ற பெற்றோர்கள் கார்த்திகேயன், கல்பனா கார்த்திகேயனுக்கு கரூர் திருக்குறள் பேரவை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

No comments:

Post a Comment