Monday 21 September 2015

நேதாஜி சுபாஷ் 1948ல் சீனாவில் உயிரோடு இருந்தார் : ஆவணத்தில் தகவல்


நேதாஜி குறித்து மேற்கு வங்க அரசு வெளியிட்ட ஆவணங்களின் வாயிலாக, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், 1948ம் ஆண்டில், சீனாவின் மஞ்சுரியா என்ற பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு இருந்தது, அவரது உதவியாளர் தேப் நாத் தாஸ் எளித்த தகவல்கள் இடம்பெற்ற ஆவணத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கம் வெளியிட்ட 64 ஆவணங்களில் ஆவணம் எண் 22ல், ஆகஸ்ட் 9, 1948ம் ஆண்டு சீனாவின் மஞ்சுரியா என்ற பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரோடு இருந்ததை, அவரது நெருங்கிய உதவியாளர் தேப் நாத் தாஸ் உறுதிபடத் தெரிவித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆவணங்கள் மூலம், 1945ல் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி மரணிக்கவில்லை என்பதும், பல ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் எத்தனையோ என்று பொதுமக்களும், சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளர்களும் ஆதங்கத்தோடு கூறுகின்றனர்.

No comments:

Post a Comment