Wednesday 23 September 2015

கரூரில் கோ ஆப்டெக்ஸ் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தொடக்கி வைத்தார்



கரூரில் கோ-ஆப்-டெக்ஸ் தீபாவளி
சிறப்பு தள்ளுபடி விற்பனையை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்


கோ-ஆப்-டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும்
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து
80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வு
அளித்தும்,  வாடிக்கையாளர்களுக்கு திருப்தி
அளித்தும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை
யொட்டி வாடிக்கையாளர் நலன் கருதி  30 சதவிகிதம்
சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு
தள்ளுபடி விற்பனை துவக்க விழாவினை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி குத்து விளக் கேற்றி தொடக்கி
வைத்தார். கடந்த ஆண்டு 50 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இல்லை நூறு
சதவிகிதம் எட்டியது. மேலும் இந்த ஆண்டு ரூ 70 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கபட்டுள்ளது.
இதில் பட்டு சேலைகள், உயர்தர பருத்தி சேலைகள், வேஸ்டிகள், ரெடிமேடு சர்ட்டுகள் உள்ளிட்ட
பல வகையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அணியும் மிக சிறந்த ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு
வைக்கபட்டுள்ளன. மேலும் அனைத்து ரகங்களுக்கு 30% தள்ளுபடியும் வழங்கபடுகிறது.

No comments:

Post a Comment