Tuesday 29 September 2015

பட்டு வளர்ப்பு திட்டத்தில் 201 ஏக்கர் பரப்பளவில் 113 விவசாயிகள் தொழில்நுட்ப முறையில் செயல்பட்டு வருகிறார்கள் மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்




கரூர் மாவட்டம்,  மண்மங்கலம் வட்டம்,  சேமங்கி கிராமத்தில்  பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் ஆலோசனைப் பெற்று பட்டுப்புழு வளர்ப்பு மையம் அமைத்து செயல்பட்டு வரும் பயனாளியின் விவசாய நிலத்திற்கு செய்தியாளர்கள் பயணம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி  தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயந்தி மல்பரி  கன்றுகள்  வளர்க்கப்பட்டு  வருவதை பார்வையிட்டதுடன்,  தொழில்நுட்பத்துடன் பட்டுப்புழு வளர்த்து வரப்படும் மையத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பட்டு வளர்ப்பு ஒரு சிறந்த வேளாண் தொழிலாக மேற்கொண்டு வருகிறார்கள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டு வளர்ப்பு திட்டத்திற்கு ஊக்கப்படுத்தும் விதமாக மானியத்திட்டம் வழங்க உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது.  கரூர் மாவட்டத்தில் தற்போது 201 ஏக்கர் பரப்பளவில் 113 விவசாயிகள்  மல்பரி பயிரிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.  இத்திட்டத்திற்காக ஒரு ஏக்கர் நடவு செய்ய தமிழக அரசு ரூ.10,500 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும்  பட்டு  வளர்ப்புக்கு  நெட் (n~ட்) அமைப்பதற்காக 1500லிருந்து 2000சதுரஅடி வரை (n~ட்) நெட் அமைத்திட ரூ.82,500ம், 1000சதுரஅடி முதல் 1500 சதுரஅடி வரை  n~ட் அமைக்க ரூ84, 500ம், 750 சதுர அடி n~ட் அமைக்க ரூ.63,000ம் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றனர்.  அதுமட்டுமின்றி சொட்டு நீர் பாசன முறையில் பயன்பெற 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகளுக்கு ரூ.30,000ம், 5 ஏக்கருக்கு  மேலுள்ள விவசாயிகளுக்கு ரூ.22,500ம் மானியம் வழங்கப்படுகின்றன.  மேலும் தளவாட சாமான்கள் (தட்டு, நெற்றிக்கா,கத்திரி,தண்டு அறுவடை இயந்திரம் ஸ்பிரேயர் தட்ப வெப்பநிலை காட்டு கருவி, குளிரூட்டும் கருவி, (மின்விசிறி) வாங்கிட ரூ.52,000 மானியம் வழங்கப்படுகின்றனர் மற்றும் பட்டுவளர்ப்பு இன்சூரன்ஸ், மகளிர் பட்டு விவசாயி மற்றும் பெண்தொழிலாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் வழங்கப்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கர் முதல் மூன்று ஏக்கர் வரை ஒரு விவசாயி பயிரிட்டு பராமரித்தல் போதிய இலாபத்தை பெற்று பயன்பெறலாம்.  குறிப்பாக ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு பயிரிட்டு அதன் மூலம் பட்டுப்புழு வளர்க்கும்போது 600கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தியாகின்றன.  ஒரு கிலோ வெண்பட்டு ரூ.300 வரை சந்தையில் விற்பனையாகின்றன.  இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80இலட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகின்றன.  இத்திட்டத்திற்கு செலவாகும் தொகையை பார்க்கும்போது ரூ.50,000 வரை மட்டுமே விவசாய பணிக்காக செலவு செய்யப்படுகின்றன.  இதனால் ஆண்டுக்கு நிரந்தர வருமானமாக இத்தொழில் திகழ்ந்து வருகின்றன.  மேலும் விவசாயிகளுக்கு தேவையான மல்பரி நாற்றுகளை கரூர் தொழில்நுட்ப சேவை மையத்தின் களப்பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு அத்துடன் நடவும் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அது மட்டுமின்றி விவசாய நிலங்களுக்கு சென்று மல்பரி செடிகள் வளர்ப்புகளுக்கு தேவையான உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை விளக்கி வருவதுடன் மேலும் பட்டுப்புழு வளர்ப்பு மையத்தை எவ்வாறு பராமரித்து பட்டுப்புழுக்கள் சேதரமின்றி வளர தேவையான ஆலோசனைகளை வழங்குவதால் விவசாயிகளுக்கு இத்தொழில் மிக எளிதாக செயல்படுத்த முடிகின்றன.  அது மட்டுமின்றி பட்டு வளர்ப்பு திட்டத்தை சுயஉதவிக்குழுக்களும் செயல்படுத்தினால் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.  அந்த வகையில் பட்டுவளர்ப்பு என்பது மிக எளிதாகவும் மற்றும் மாதாந்திர வருவாய் ஈட்டகூடிய தொழிலாக திகழ்ந்து வருகின்றனர்.  இத்திட்டத்திற்கு அதிக அளவில் விவசாய நிலங்கள் தேவைப்படுமோ என்று எண்ண வேண்டாம்.  ஒரு ஏக்கர் பரப்பளவில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.  இதற்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து செயல்படும்போது தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.  எனவே மற்ற விவசாயிகளும் இத்திட்டத்தின் பயன்கள் தெரிந்து கொண்டு தமிழக அரசு வழங்கி வரும் மானியத் திட்டங்களை பெற்று மற்ற தொழில்கள் செய்து வருவதுடன்ää பட்டுப்புழு வளர்ப்பும் இணைப்பு தொழிலாக அமைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் ஆண்டுகளில் பட்டுப்புழு வளர்ப்பில் கரூர் மாவட்டம் சிறந்து விளங்கி வருகின்றன என்ற நிலையை உருவாக்கி மாவட்டத்திற்கு பெருமை தேடித்தருகின்ற அளவிற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  வடிவேல் துணை அலுவலர் கலைச்செல்வி மற்றும் முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment