உலக சுற்றுலா தினம்
உலகம் முழுவதும் 28 ம் தேதி கொண்டாடி வரும்
நிலையில் பஸ் பாடி கட்டும் தொழில், கொசுவலை, டெக்ஸ் டைல்ஸ் யுனிட், விவசாயம்,
ஆன்மீகம், புராதானம் ஆகியவன மிக்க கரூர் மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் இது வரை புதுப்பிக்க
வில்லை என்பது சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு பள்ளியில்
பயிலும் மாணவ, மாணவிகள் கூட ஒரு வருட படிப்பு சுமை குறைய தங்களுடைய கவனத்தை ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர்கள் மறக்கடிக்க ஆண்டு தோறும் சுற்றுலா கூப்பிட்டு செல்கின்றனர். இதே
போல் வணிக நிறுவனங்கள், எம்.என்.சி. கம்பெனிகள், கார்ப்பேரேட் கம்பெனிகளில் பணிபுரிவர்கள்
கூட இப்படி தான் இன்ப சுற்றுலா சென்று தங்களது மனதை மகிழ்விக்கின்றனர்.
இந்நிலையில் தங்களது குடும்பத்தோடு
இன்பச்சுற்றுலா செல்லும் குடும்பத்தினர் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட
இடங்களுக்கு பொருளாதார வசதிக்கேற்ப ஒரு வருடத்திற்கு ஒரு முறை அல்லது 3 முறை சென்று
வருகிறார்கள். ஆனால் கரூர் மாவட்டம், வணிகம். விவசாயம், ஆன்மீகம் மற்றும் புராதானம்
மிக்க இப்பகுதியில் மாயனூர் படுக்கை அணையானது கதவணையாக மாற்றப்பட்டது. இதனால் பரிசல்
பயணமும் முடக்கப்பட்டது, இந்நிலையில் இங்குள்ள பூங்கா ஆனது பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
மேலும் கரூர் அருகே சுக்காலியூரை அடுத்த செட்டிப்பாளையத்தில் உள்ள அணைக்கட்டை சீரமைக்காததோடு,
அங்குள்ள சுற்றுலா மையத்தையும் பரமாரிக்காமல் அங்கு புலு, பூச்சிகள் முடங்கியுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இனிமேலாவது கரூர் மாவட்ட நிர்வாகமும், அரசும், கரூர்
மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களை புணரமைக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்
No comments:
Post a Comment