Saturday, 19 September 2015

ம.தி.மு.க வில் இருந்து தி.மு.க விற்கு சென்ற நிர்வாகிகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை - அவர்கள் அடிமாடுகள் வாட்ஸ் அப்பில் வலம் வரும் அந்த அதிர்ப்தியாளர்கள் - ம.தி.மு.க இணையதளத்தினர் படுத்தும் பாடு



வாட்ஸ் அப்பில் வலம் வரும் மாஜி ம.தி.மு.க வினர் படும் பாடு ம.தி.மு.க இணைய தளத்தினர் பட்டையை கிளப்புகின்றனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது.,
கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளைப் பத்திக்கொண்டு போவதுபோல திமுகவில் மதிமுகவினரைச் சேர்த்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது...
வைகோ என்ற ஒரே மனிதரின் சூத்திரத்தி்லும் தொண்டர்களின் பலத்தில் தான் மதிமுக... வேறு யாரும் அதன் காரணமும் அல்ல... மதிமுகவில் இருந்து சென்ற சோமுவுக்கும், மாசிலாமணிக்கும், குமரிக்கும் வைகோ கொடுத்த அடையாளம் தான் முகவரி. மற்றபடி அவர்களுக்குத் தகுதி என்ன இருக்கிறது?
ஏற்கனவே மதிமுக படைவரிசையில் இருந்த பொன்முத்துராமலிங்கம், கோவை கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், வேதாரண்யம் மீனாட்சி சுந்தரம், கே,எஸ், ராதாகிருஷ்ணன், எல்.கணேசன், மதுரை செ.ராமச்சந்திரன், விஜயா தாயன்பன், போன்ற தமிழ்நாட்டுக்கு அடையாளம் தெரிந்தவர்களையெல்லாம் திமுகவுக்கு அழைத்துச் சென்று ஒருநாள் கூத்தாக்கி தெருவில் விட்டனர்...
இப்படி அடையாளம் தெரிந்த முக்கியமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் இன்று பெயருக்கு மாடுகளைப் போல பத்திச் செல்லப்பட்டிருக்கும் இந்த பிரகஸ்பதிகளுக்கு ஒருநாள் முரசொலி, மறுநாள் கலைஞர் தொலைக்காட்சி செய்தியில் படம் வரும் அவ்வளவுதான்...
திமுகவிலே பல போட்டிக்குழுக்கள் பங்காளிச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் கோவை மாவட்டம், சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், நீலகிரி மாவட்டம், புதுச்சேரி என அனைத்து் மாவட்டங்களிலும் திமுகவுக்குள் உள்குத்து வேலைகள். இதை தீர்க்க துப்பில்லை. ஒரு வலுவான கூட்டணி அமைக்க திராணி இல்லை...
மதிமுகவில் இருந்து ஆட்களைப் பிடித்து திமுகவை காப்பாற்ற வேண்டிய நிலை இருந்தால் இதைவிட என்ன கேவலம் இருக்கமுடியும். அப்படியென்றால் திமுக நிர்வாகிகள் எல்லாம் பயனற்றவர்களா? 2001லிருந்து ஸ்டாலின் திமுகவின் பொதுத்தேர்தலில் பொறுப்பெடுத்து வருகின்றாரே எந்த தேர்தலிலாவது அவர் தொட்டது துலங்கியுள்ளதா?
முதலில் திமுகவைச் சுத்தப்படுத்திக்கொண்டு மற்ற இடத்தில் அழுக்கு இருக்கின்றது எனச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு மதிமுகவை பொறிவைத்து எவ்வளவு துளாவினாலும் ஒன்றும் செய்யமுடியாது..
திமுகவில் பெரிய பொறுப்பிலிருந்தாலும் ஸ்டாலின் முதலில் தனக்கு வணக்கம் தெரிவிக்கும் கட்சிக்காரர்களை திரும்பி வணக்கம் தெரிவித்து பணிவும் மரியாதையும் காட்டப் பழகிக் கொண்டு மற்றபணிகளை பிறகு கவனிக்க வேண்டும். அகந்தையும் திமிரையும் கொண்டவர் எப்படி தலைவனாக இருக்க முடியும்..?!! பணிவும் பண்பும் இல்லாதவரைக்கும் ஸ்டாலின் தலைவரும் அல்ல; தளபதியும் அல்ல; தளர்பதி தான்...
ஏற்கனவே திமுக குடும்பக் கட்சி என்று அடையாளப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களையே தீர்க வழியைக் காணோம். ஸ்டாலின் பொருளாளர். முன்னாள் துணை முதல்வர், அழகிரி முன்னாள் மத்திய அமைச்சர், கனிமொழி இருமுறை நாடாளுமன்ற உறுப்பினர். மறைந்த முரசொலி மாறன் 35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறன் முன்னாள் அமைச்சர் என குடும்பத்துக்குள்ளேயே பதவிகளைப் பிரித்துக் கொடுப்பதுதான் ஜனநாயகமா?
குடும்பக்கட்சி எனச் சொல்லக்கூடிய நிலையில் அடுத்து ஒரு குற்றச்சாட்டாக, குடும்பத்துக்குள்ளே இன்னொரு குடும்பக்கட்சியாக ஸ்டாலின் நடத்துகிறார். அவர் மருமகன் சபரீசன், அவரது துணைவி துர்கா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று குடும்பக்கட்சிக்குள்ளே இன்னொரு குடும்பக்கட்சி. என்ன ஒரு வேடிக்கை விநோதம். கலைஞரிடம் கட்சி இல்லை. அவர் நினைப்பதும், சொல்வதும் எதுவும் நடப்பதும் இல்லை...
தொடர்ந்து விபரீதங்களை நிகழ்த்திவரும் இப்படியான ஸ்டாலின்
கடைசிவரைக்கும் தலைவராகவே முடியாது... தளபதியாகவும் செயல்பட முடியாது... தளர்பதியாகவே இருப்பார்... என வாசகங்கள் அடங்கி ம.தி.மு.க வினர் தற்போது பம்பரம் போல் சுழல ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment