Thursday 24 September 2015

விளம்பரத்திற்காக ஸ்டாலின் ஸ்டண்ட் அடிக்கிறார்: சேலத்தில் அன்புமணி ராமதாஸ் அசத்தல் பேட்டி




பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க கிளீன்சேலம் என்ற இணைய தள முகவரியை பசுமை தாயகம் அமைப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து தொடங்கி உள்ளன.
இதன் தொடக்க விழா சேலத்தில் இன்று காலை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு இணைய முகவரியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
www.cleansalem.com என்ற இந்த இணைய தள முகவரியில் பொதுமக்கள் எந்த குறைகளையும் தெரிவிக்கலாம். இதன் மூலம் அதிகாரிகளை சந்தித்து புகார் செய்வோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தலாம். இந்த வசதியை பொதுமக்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
பாட்டாளி மக்கள் கட்சி வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதையடுத்து அனைத்து மாவட்டத்திற்கும் சென்று கருத்து கேட்டும் வருகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இதை வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு:–
கேள்வி:–தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் மதுகடைகளை மூடி விடுவோம். உடனே பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க.வினர் கூறி உள்ளனரே?
பதில்:– கடந்த 44 வருடமாக மாறி மாறி ஆட்சிசெய்து விட்டு இப்போது இப்படி கூறுகிறார்கள். தமிழ்நாடு குடிகார நாடு என கூறும் அளவிற்கு செய்து விட்டு இப்போது இப்படி கூறுகிறார்கள். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என மதுகுடித்து அதற்கு அடிமை ஆகி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களால் எப்படி மதுக்கடைகளை மூட முடியும். இப்போது ஸ்டாலின் ஸ்டண்ட் அடித்து வருகிறார்.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுகவினருக்கு அப்போது விவசாயிகளை பற்றி தெரியாதா? குடிசைகள் இருப்பது தெரியாதா? டீக்கடை இருப்பது தெரியாதா? மீனவர் பிரச்சனை பற்றி தெரியாதா? இப்போது தேர்தலுக்காக ஸ்டாலின் ஸ்டண்ட் அடிக்கிறார்.
விளம்பரத்திற்காக அப்படி செய்கிறார். இதை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள். இது எடுபடாது. நடித்தது போதும். நாங்கள் கூறியதை அப்படியே காப்பி அடிக்கிறார்கள்.
அ.தி.மு.கவின் மீதும் மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். நிர்வாகம் இல்லை. 110–ல் அறிக்கை விடுகிறார்கள். பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியை நம்புகிறார்கள்.
கேள்வி:– கூட்டணி ஆட்சி ஏற்படுமா?
பதில்:–கூட்டணி ஆட்சித்தான் ஏற்படும். தி.மு.க, அ.தி.மு.க தவிர யார் வந்தாலும் எங்கள் கூட்டணியில் சேர்த்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment