கரூர் மாவட்டம்,
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூர் பகுதியை சார்ந்தவர் துரைசாமி (வயது 75), இவருக்கு
1926 ல் கரூர் அடுத்த சுங்ககேட் பகுதியில் உள்ள சிவசக்தி நகரில் சுமார் 9.58 ஏக்கர்
நிலம் சொந்தமாக இருந்த நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கொளரிபுரத்தை சார்ந்த
அங்காளம்மன் எக்ஸ்போர்ட் உரிமையாளர் இராமசாமி, அவரது நண்பர் அண்ணாமலை எக்ஸ்போர்ட் உரிமையாளர்
பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், துரைசாமிக்கு சொந்தமான நிலத்திலிருந்து சுமார் 5.50 ஏக்கர்
நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட
துரைசாமி சம்பவ இடத்திற்கு சென்று கேட்டதற்கு இந்த நிலம் எங்களுக்கு சொந்தம் என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து
வந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமியின் நிலத்தை மீட்டு அவரிடமே ஓப்படைக்குமாறு
உத்திரவிட்டதோடு, நிலத்தை அபகரித்த இரு தொழிலதிபர்களை கைது செய்யுமாறு உத்திரவிட்டார்.
இதனடிப்படையில் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு
போலீஸார் அந்த இரு தொழிலதிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.
பின்பு வழக்கை விசாரித்த நீதிபதி இந்த இருவருக்கும் தனிநபர் ஜாமின் அடிப்படையில் அவர்களுக்கு
ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார். மேலும் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர்
இராமசாமி முன்னாள் அ.தி.மு.க ஆட்சியில் தாந்தோன்றி மலை பெருமாள் கோயில் அறங்காவலர்
குழு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment