கரூர் அருகே நொய்யல்
பகுதியில் நொய்யல் பாசன விவசாயிகள் நல சங்க பொதுக் கூட்டம் இதன் தலைவர் நொய்யல் இராமசாமி
தலைமையில் நடைபெற்றது. கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இருந்து
சுமார் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு
முன்னர் நொய்யல் ஆற்று பகுதியில் உள்ள பாசன விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, மஞ்சள்
உள்ளிட்ட விவாசய பொருட்களை விவசாயம் செய்து வந்தனர். திருப்பூர் சாயப் பட்டறையில் இருந்து
வந்த கழிவு நீரானது நொய்யல் ஆற்றில் கலந்து இப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல முறை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியும்
அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளே ஒன்று சேர்ந்து
உச்சநீதி மன்றத்தில் உரிய இழப்பீட்டு தொகை வழங்கிடுமாறு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில்
இன்று நொய்யல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
நொய்யல் இராமசாமி தெரிவிக்கையில் சுற்றுச்சூழல் இழப்பீட்டு ஆணையத்தை மத்திய அரசு கலைக்க
முயற்சிப்பதற்கு விவசாயிகள் கண்டனம் – இழப்பீட்டு ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமிக்க
வேண்டியும், திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வருகிற
சட்டமன்ற தேர்தலில் பிரச்சினையை முன்னிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பது என தெரிவித்தார்.
பேட்டி : நொய்யல்
– மா.இராமசாமி – தலைவர் – நொய்யல் பாசன விவசாயிகள் நல சங்கம்
No comments:
Post a Comment