அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது! தி.க தலைவர் வீரமணி பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது இந்த அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
20.9.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும்!
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நம்முடைய காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீர்வரத்து கருநாடக அரசு மறுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கருநாடக அரசைப் பார்த்து ஒவ்வொரு முறையும் நாம் மனு போட்டு கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அடிப்படையில் தெளிவாக செய்யவேண்டியது - தமிழகத்தில் உள்ள அத்துணை கட்சிகளும் சேர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி, ஏன் இன்னமும் டில்லி மேல்முறையீட்டு மன்றத்தை - உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்து, பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அதனை இன்னமும் நடைமுறைக்குக் கொண்டு வராமல் மத்திய அரசு இருக்கவேண்டும்? இதனை வலியுறுத்த அத்துணை இயக்க நண்பர்களும், தலைவர்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இதனை வலியுறுத்தினாலே, அதனுடைய கடமையை அது தாராளமாகச் செய்யும். அந்த வாய்ப்பை உரு வாக்கவேண்டும்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரவேண்டும்!
அதுபோலவே, ஈழத்தில் நடந்த இனப்படு கொலையைப்பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர் களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மற்ற கட்சித் தலைவர்களால் வரவேற்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு, அய்.நா. சபையில், மனித உரிமை அமைப்பில் அதற்கு வேண்டிய உரிய முயற்சியை எடுக்கவேண்டும்.
ஏற்கெனவே முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தில், அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருந்தாலும், எது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த சூழ்நிலைக்கு அழுத்தம் தரக்கூடிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆகவே, இந்தப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் கடிதம், தீர்மானங்களோடு நிறுத்திவிடாமல், மத்திய அரசுக்கு அனைவரும் ஒத்த குரலில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும்.
பகுத்தறிவு பூமியில் நரபலியா...?
அதுபோன்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நரபலி என்கிற சொல்லைக் கேட்கும்போதே அருவருப்பாக இருக்கின்றது. இந்தப் பகுத்தறிவு பூமியில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பது மிகமிக வேதனைக்கும், வெட் கப்படக்கூடிய சூழ்நிலையாகும். இதற்குரிய நடவடிக் கைகளை தெளிவாக எடுக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. அதற்காகப் பதில் சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது. அதனை உறுதியாகச் செய்ய வேண்டும். நாடு போகின்ற போக்கில், மிகத் தெளிவாக இந்தச் செய்திகளை உருவாக்கிக் காட்டவேண்டியது மிகப்பெரிய பொறுப்பாகும்.
அரசு அதிகாரிகள் தற்கொலை
மாநில அரசு அதிகாரிகள் தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது இந்த அரசுக்குப் பெருமை தருவ தல்ல. எனவே, அதற்குத் தகுந்த விளக்கமும், மாற்றமும் தேவை. அதுகுறித்து மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும்.
கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கும்வரை...
செய்தியாளர்:தேர்தல் நெருங்கி விட்டாலே, திராவிட கட்சியில் உள்ளவர்கள் கட்சி
மாறுகிறார்களே அதுபற்றி...?
தமிழர் தலைவர்: கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கின்ற வரையில், கட்சிகள் மாறுகிறார்கள். கட்சி மாறுவது கூடாது என்று சொன்னால், கட்சிகளை உரு வாக்குவார்கள்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment