Monday 21 September 2015

தனி ஈழம் வேண்டி கரூரில் ரயில் மறியல் - இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை கோரி கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கைது




ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தி கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட செயலாளர் சத்திய மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை வலியுறுத்தியும், மனித உரிமை கமிஷனை வலியுறுத்தியும் மாபெரும் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி : சத்தியமூர்த்தி – மாவட்ட செயலாளர் – தமிழக வாழ்வுரிமைகட்சி

No comments:

Post a Comment