Saturday 19 September 2015

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் ஜெ. அதிரடி உத்தரவு



பெண் டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ரவி. ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர். இவரது இரண்டாவது மகள் ஆர். விஷ்ணுபிரியா (27). சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு எழுதிய விஷ்ணுபிரியா அதில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வா னர். சிவகங்கையில் பயிற்சி முடித்த பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முதன்முதலில் டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டார். 
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் உயரதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மகள் விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தினர். உள்துறை செயலருக்கும் மனு அளித்தனர். இதேபோல தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக மாற்றி உத்திரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment