Wednesday 23 September 2015

நாகை மீனர்வர்கள் 15 பேரை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம்


கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கச்ச தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனர்வர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை  விடுதலை செய்ய, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  பிரதமர் நரேந்திர மோடிக்கு,  இன்று கடிதம் எழுதியுள்ளார். 
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை காரணம் காட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 15 பேர் மற்றும் 28 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே  தமிழக மீனவர்களின் 26 படகுகள்  இலங்கையில் உள்ளது என்பதும் நினைவு கூரத்தக்கது.
எனவே எனவே, நாகை மீனவர்கள் 15 பேர் மற்றும் 28 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment