Saturday 26 September 2015

25வது மாநில ஜீடோ போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் சாம்பியன்


25 வது மாநில ஜீனியர் ஜீடோ போட்டி கடந்த 19,20 அகிய தேதிகளில் ஒட்டச்சத்திரம் கிரிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்ட பரணிபார்க் பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு 3 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப் பதக்கமும் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

மாணவர் D.கோகுல் 66 கிலோ எடைபிரிவிலும், C.நித்திஸ்குமார் 81 கிலோ எடைபிரிவிலும், G.லோகவித்யா 63 கிலோ எடைபிரிவிலும் தங்கம் வென்றனர். S.வினித் 81 கிலோ எடைபிரிவிலும், R.சூர்யபிரகாஷ் 73 கிலோ எடைபிரிவிலும், மாணவிகள் S.மகேஸ்வாரி 57 கிலோ எடைபிரிவிலும், S.அபிநயா 63 கிலோ எடைபிரிவிலும், M.சோபியா 63 கிலோ எடைபிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

சாம்பியன் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக்குழுமத்தின் செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்,நிர்வாக அலுவலர் M.சுரேஷ், பரணிபார்க் பள்ளியின் முதல்வர் K.சேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு  மாணவ,மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.

புகைப்படம்: சாம்பியன் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்.

No comments:

Post a Comment