தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தனது அரசியல் சாணக்கிய தந்திரத்தாலும், ஸ்டாலினுடைய ஏற்பாட்டினாலும், ம.தி.மு.க வினரை குறிவைத்து அவர்களுக்கு ஓரு சீட் மற்றும் லம்ப் அமொளண்ட் அதாவது தொகை கொடுத்து தி.மு.க தரப்பில் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தநிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ முதன் முறையாக கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணியை கட்சியை விட்டு நீக்கினார். அவர் நாளை தி.மு.க விற்கு செல்ல நினைத்ததை அறிந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ நான் இன்றே உன்னை கட்சியை விட்டு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டது ம.தி.மு.க வட்டாரத்திலேயே ஓரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். பின்பு ஓவ்வொரு ம.தி.மு.க வினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2016 தி.மு.க தேர்தல் செலவு ரூ 4 ஆயிரத்து 900 கோடி எனக்கூறப்படுகிறது.
இதையொட்டி ஒவ்வொரு ம.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு ரூ 10 கோடி இறைக்கப்படுகிறதாம். இந்நிலையில் ம.தி.மு.க தொண்டர்கள் எப்படியாவது தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகனும், தி.மு.க வால் அவமானப்படுத்தப்பட்டவருமான மு.க.அழகிரியை தங்கள் கட்சியில் இணைக்க ஒரு குழு செயல்பட்டு வருகிறது. எது எப்படியோ அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரியை ம.தி.மு.க விற்கு இழுத்து விட்டால் போதும் ம.தி.மு.க வை ஒரு சுற்று சுற்றி விடலாம் என்கின்றனர் மற்ற கட்சியினர்
No comments:
Post a Comment