திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ஓய்வு அறை வசதிகள் செய்து தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
1. திருவண்ணாமலை நகரில் கோயிலைச் சுற்றி அமையப் பெற்றுள்ள கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக, 7 மீட்டர் முதல் 10 மீட்டர் அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், ஓய்வு அறை வசதிகள் செய்து தரப்படும். இவை 65 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
No comments:
Post a Comment