Saturday, 26 September 2015

ஆட்டோவில் போகிறார் !, சைக்கிளில் போகிறார் ! ஸ்கூட்டியில் போகிறார் ! எதிலையாவது ஒன்றில் போய் தொலைய வேண்டும் ! தீடீரென நடந்து செல்கிறார். திடீரென வேஷ்டியில், பின்னர் அனைத்தையும் கழட்டி போட்டு விட்டு டீ சர்ட்டில் வகை வகையாக ஸ்டாலினை சாடிய – அமைச்சர் உதயகுமார் கரூரில் வகை பாடிய அமைச்சர்





ஜெ பேரவை சார்பில் வாக்குச்சாவடி வாரியாக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம் மாவட்ட அளவில் கரூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜெ பேரவை மாநில செயலாளரும், தமிழக வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தொழிற் துறை அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சருமான பி.தங்கமணி, மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெ பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், வீதி, வீதியாக சென்று மக்களை கோபப்படுத்தி கோபப்படுத்தி ஸ்டாலின் பேசுகிறாரே ? உங்கள் ஆட்சியில் மின் வெட்டு அதிகமாக இருந்தது. ஆனால் எங்கள் ஆட்சியில் புரட்சித்தலைவியின் ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு உங்களது தி.மு.க ஆட்சியில் சீர்குழைந்து இருந்தது. ஆனால் அம்மா ஆட்சியில் தற்போது அமைதி பூங்காவாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறார் எங்கள் புரட்சித்தலைவி அம்மா என்றார். சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்காது என்றார். அப்படியே நடந்தாலும் அந்த மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார் என்றார்கள், ஆனால் அதிகளவில் திரண்டதால் வாயடைத்து நின்றார்கள். மேலும் எத்தனையோ அறிக்கைகள், பொய் அறிக்கைகள், பொய் பிரச்சாரங்கள் என பல வழிகளில் தி.மு.க வினர் கட்டு அவிழ்த்து விட்டனர். ஆனால் அமைதியாக புரட்சித்தலைவி அம்மா அமைதியாக இருந்தார் என்பதை தி.மு.க வை வகை, வகையாக திட்டி தீர்த்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மேலும் இன்று உலக முதலீட்டாளர் மாநாடு வரலாற்று சாதனை நிகழ்வாக அமைந்ததையடுத்து தற்போது அனைத்து கட்சியினரும் வாயடைத்து உள்ளார்கள் தற்போது அம்மாவின் சாதனைகளை வீதி, வீதியாக நமது ஏழை எளிய தொண்டர்கள் கூறி வாக்குகள் சேகரிப்பதோடு, எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தற்போது எதிர் கட்சியினர் மற்றும் உதிர் கட்சியினர் கனவு கண்டு வருகிறார்கள் அவர்களது கனவை அடித்து நொறுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஆட்டோவில் போகிறார். சைக்கிளில் போகீறார் ! ஸ்கூட்டியில் போகிறார். எதிலையாவது ஒன்றில் போய் தொலைய வேண்டும், தீடீரென நடந்து போகிறார், தீடீரென வேஷ்டி சட்டையில் போகிறார், தீடீரென அனைத்தையும் அவிழ்த்து போட்டு விட்டு டீ சர்ட்டில் போகிறார்.  ஆட்டோவில் போறமாதிறி ஒரு போட்டோ, சைக்கிளில் போறமாதிரி ஒரு போட்டோ !, கடைசியில் பாடையில் மாதிரி ஒரு போட்டா ! தி.மு.க தோற்குமென்று நாம் சொல்ல தேவையில்லை அவங்க அண்ணன் அழகிரியே போதும் ஏனென்றால் ஸ்டாலினை மிகை படுத்தி தி.மு.க களம் இறங்கும் போது தி.மு.க தோற்று போகும் என ஸ்டாலினுடைய அவங்க அண்ணன் அழகிரியே சொல்கிறார். இதை தி.மு.க தலைவர் கருணாநிதியே ஒன்றும் சொல்ல முடியாது ஏன் என்றால் இது உண்மையா ? பொய்யா ? என அவருக்கே தெரியாது எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டும் நடைபயணம் தான் இந்த ஸ்டாலினின் நடைபயணம் என்றார். மேலும் எத்தனை சோதனை வந்தாலும் நீதி ஜெயித்து மீண்டும் அ.தி.மு.க ஜெயிக்கும் அதுவரை தீய சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அவர் கடைசியில் தீய சக்தி இறக்குமென கருணாநிதியை வெளிப்படையாக திட்டி தீர்த்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அளவில் ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஜெ பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் கரூர் மாவட்ட ஜெ பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment