Monday, 28 September 2015

தமிழ்நாட்டின் உரிமையை கேரளா மாநிலம் தடை செய்துள்ளதை நேரில் பார்வை. - பா.ம.க வினருடன் ஒரு நாள்




கன்னியாகுமரி மாவட்டம் பாசனம் பெறும் வகையில் கேரளா - தமிழ்நாடு இரு மாநிலங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கினங்க கேரள மாநிலத்தின் நெய்யாற்றக் கரையின் இடது கரை கால்வாய் 25.4.1963 வியாழக்கிழமை கேரள மாநில முதலமைச்சர் ஆர்.சங்கர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.காமராஜர் அவர்கள் பாறசாலை ஊராட்சி, சுந்தரிமுக்கு என்ற இடத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்து வைத்துள்ளார்.
ஆனால் நீண்டகாலமாக கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்த நிலையில் இடையில் கேரளா வாய்க்காலை அடைத்துவிட்டது. கன்னியாகுமரி மாவட்டப் பாசனம் தடைபட்டுவிட்டது. இதை தமிழ்நாடு அரசு கேரள மாநில அரசிடம் உரிமை கோரவில்லை.
எனவே அந்த இடது கரை கால்வாய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதையும் பாதிப்பு நிலையையும் கண்டறிய நான் (ஜி.கே.மணி) நேற்று காலை பா.ம.கவினருடன் நேரில் சென்று பார்வையிட்டார். அவரது பா.ம.க முக்கிய நிர்வாகிகளும் அவருடன் சென்று ஒரு நாளையே கழித்தனர். ஏனென்றால் இயற்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளரும் உலக சுற்றுலா தினத்தையொட்டி கரூரில் மட்டும் ஏன் சுற்றுலா தளம் மேம்படுத்த அரசு முயல வில்லை. இதை எங்களது முதல்வர் வேட்பாளர் சின்ன அய்யா வரும் போது சுட்டிக் காட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment