Sunday 27 September 2015

கரூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி கடையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, இரண்டு பேர் கவலைக்கிடம்.


கரூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஜவுளி கடை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்களில் சிலர் வெளி மாவட்டங்களிலிருந்து வேலை செய்து வருவதால் கடை அருகிலேயே உள்ள கட்டிடத்தில் தங்கி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது.கட்டிடத்தின் அருகேயுள்ள மின்கம்பத்திலிருந்து மின்கசிவு இவர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் சுவற்றில் மின்சாரம் பாய்ந்துள்ளது.இது தெரியாமல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த முருகன் எதிர்பாராத விதமாக சுவற்றின் மீது கைவைத்ததால் மின்சாரம் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்,மேலும் இவரை காப்பாற்ற சென்ற விஸ்ணு,பாஸ்கரன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியபட்டனர்,இவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment