காட்டு மிருகங்கள் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி, காட்டுப் பன்றி தாக்கியும், கோவை மாவட்டம் காரமடை பகுதியின் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டம் ராவணபுரம் கிராமத்தின் மாரியப்பன், நீலகிரி மாவட்டம் குசுமிகரி பகுதியைச் சேர்ந்த டோமி என்ற செபாஸ்டின் ஆகியோர் காட்டு யானை தாக்கியும், நீலகிரி மாவட்டம் திருச்சிகடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் காட்டெருமை தாக்கியும் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும்.
மேலும், கரடி தாக்கியதில் காயமடைந்த நீலகிரி மாவட்டம் சேரங்காடு கிராமத்தின் ஞானதிலகத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment