இன்று உலக இருதய
தினம், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் ஆங்காங்கே பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். கரூர் அப்போலோ
மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு, மது பழகத்தினாலும், புகை
பிடிக்கும் பழக்கத்தினாலும் இருதய அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது, என்றும்
இது குறித்து நூதன விழிப்புணர்வு பிரச்சார பேரணி தொடங்கப்பட்டது. கரூர் அப்போலோ மருத்துவமனை
முன்பு தொடங்கிய இப்பேரணியை தலைமை மருத்துவ அதிகாரியும், மருத்துவருமான செந்தில்குமார்
தொடக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இருதய நல
சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.கேசவன் கூறுகையில்., உலகம் முழுவதும் இன்று
உலக இருதய நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆரம்பித்ததன் நோக்கம் என்னவென்றால் 40 வயதிற்குட்பட்டவர்கள்
நாளடைவில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும்,
பெண்களுக்கும் இருதய நோய் அதிகம் ஏற்படுவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் வருடந்தோறும் செப்டம்பர் 29 ம் தேதி விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகிறது. வேர்ல்டு ஹார்ட் பெடரேஷன் என்ற அமைப்பு (உலக இருதய அமைப்பு) இந்த
உலக இருதய நாளை கொண்டாடி வருகிறது. இந்த வருடைய விழிப்புணர்வானது ஹார்ட் ஹெல்த்தி என்வெராண்ட்மெண்ட்
என்பதாகும், அதாவது நாம் வசிக்கக்கூடிய சூழ்நிலையை ஹார்ட் பிரண்ட்லியாக உருவாக்க வேண்டும்.
அதாவது உடற்பயிற்சி, புகைபிடிக்காமை, மற்றவர்களை புகை பிடிப்பதால் நமக்கும் அந்த புகை
நோய் பரவுகிறது. அதை தடுக்க முன் வரவேண்டும், மது பழக்கத்தை கைவிட வேண்டுமென்பது என்பதை
வலியுறுத்தி இன்றைய உலக இருதய தினம் கொண்டாடப்படுவதாகவும் மருத்துவர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.
மேலும் உலக அளவில் இந்தியா தான் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
எனவும் தெரிவித்தார்.
பேட்டி : மருத்துவர்
எஸ்.கேசவன் - கரூர்
No comments:
Post a Comment