இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். அப்போது நிருபர்கள் ஐ.நா. விசாரணை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், ´தமிழக முதல்வர் ஆட்சி நல்ல முறையில் உள்ளது. வரும், 2016ல் மீண்டும் ஜெயலலிதா தான் முதல்வராக வருவார் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.
பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ஐ.நா. சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும்.
திருச்செங்கோடு, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், இரவும் பகலுமாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் உண்மைகள் வெளி வரும். தேவைப்பட்டால் சி.பி.ஐ., விசாரனை நடத்த முதல்வர் முடிவெடுப்பார்.
பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ஐ.நா. சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும்.
அப்போதுதான், உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment