Sunday 20 September 2015

கரூர் அருகே பாலவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பாலவிடுதி ஊராட்சி காசநோய் இல்லாத ஊராட்சி என பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள் தகவல் !!!


கரூர் மாவட்டம், கடவூர் வட்டம்,  பாலவிடுதி ஊராட்சியில் 20.09.2015 இன்று  மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள்  (காசநோய்) துறையின் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர்  ச. ஜெயந்தி  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பேசுகையில்,
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க பொது சுகாதாரத்துறையின் மூலம்  பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிட உத்தரவிட்டு அதனடிப்படையில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நோக்கம் அனைத்து மக்களும் ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என்பதே ஆகும். அதற்கேற்ப சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவது மட்டுமின்றி காசநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்காத வண்ணம் பொதுமக்களை பாதுகாத்திட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக சிலபேர் காசநோய் இருப்பதாக அறிந்தால் வெளியில் தெரியாமல் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு இருந்திடாமல் நோய் என்றால் எல்லோருக்கும் வரத்தான் செய்யும், அதை மூடி மறைத்திடும் பட்சத்தில் நோயின்தன்மை அதிகரித்து அதன்பின் சிகிச்சை பெறும்பொழுது அதனால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றன. அதனால் பொதுமக்களிடையே  நல்ல விழிப்புணர்வு பெற வேண்டும்.  இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியம்தான் மிகவும் அவசியம். அதைப்பாதுகாத்துக்கொள்வது உங்களது முக்கிய கடமையாகும். எனவே  தமிழக முதல்வர் அம்மா அவர்களின் எண்ணம்போல் நீங்கள் நன்றாக வாழ்ந்திட  அரசின் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். தற்பொழுது ஒருமாத காலமாக இப்பகுதியில் மருத்துவ குழு பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை மேற்கொண்டு பாலவிடுதி ஊராட்சியில் காசநோய் இல்லை என்ற உறுதியை நம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.

எனவே காசநோய் இல்லாத பாலவிடுதி ஊராட்சியைப் போல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளும் விளங்கிட வேண்டும். அதற்கு பொதுமக்களும் உறுதுணையாக இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என  பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் செ. காமராஜ் மாவட்ட வருவாய் அலுவலர்  மு. அருணா, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள்  மரு.விஜய்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ரமேஷ்,  கடவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி செல்வராஜ்,  பாலவிடுதி கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட காசநோய் மருத்துவ அலுவலர் மரு.பாண்டியன்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நாகப்பன், சித்ரா, பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் வி. மருதாம்பாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment