Monday 28 September 2015

வெற்றிடத்தை காற்று நிரப்பும் கரூரில் ம.தி.மு.க ஆட்சி மன்ற குழு தலைவர் கணேசமூர்த்தி கரூரில் அதிரடி பேட்டி




தமிழகத்தில் மறுமலர்ச்சி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளில் சேர்ந்தனர். இந்நிலையில் முதன் முறையாக மறுமலர்ச்சி தி.மு.க விலிருந்து கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய பரணி மணி என்பவரை கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக்கினார். இதையடுத்து கரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட செயலாளரும், ம.தி.மு.க மாநில ஆட்சி மன்றக்குழு தலைவருமான கணேசமூர்த்தி தலைமையில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பியும், ம.தி.,மு.க வின் உயர் நிலைக்குழு தலைவருமான கணேசமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உதய பூமியாக கரூர் மாவட்டத்தில் வரும் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் கழக பொதுச்செயலாளர் வை.கோ சுற்றுப்பயணம் அறிவித்துள்ளார். இம்மாவட்டத்தின் செயலாளரும், கரூர், குளித்தலை இரு நகர செயலாளர்கள் எங்கள் இயக்கத்தை விட்டு விலக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில் நடைபெறும் இந்த வை.கோ வின் சுற்றுப்பயணத்தை வெற்றிக்கரமாக நிறைவேற்ற வேண்டி இக்கூட்டம் நடைபெற்றதாகவும், இக்கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வெற்றிடம் ஏற்பட்டால் அதை காற்று நிரப்பும் என்ற பழமொழிக்கு ஏற்ப இருக்கும் தொண்டர்கள் அனைவரும் மாவட்ட செயலாளர்கள் பதவியில் செயல்படுவார்கள். கரூர் மாவட்ட கழகத்தை பொறுத்தவரை எந்த வித பாதிப்பும் இல்லை. சேதாரமும் இல்லை, செய்கூலியும் இல்லை என்ற மாதிரி மறுமலர்ச்சி தி.மு.க அதன் பணியை சிறப்பாக செய்து வருகிறது என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை.சிவா, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் கபினி சிதம்பரம் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கரூர் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதையடுத்து தான் இந்த எழுச்சி கூட்டம் என்கின்றனர் மற்ற நிர்வாகிகள்
பேட்டி : கணேசமூர்த்தி – ஈரோடு மாவட்ட செயலாளர் – ம.தி.மு.க ஆட்சி மன்றக்குழு தலைவர்

No comments:

Post a Comment