Thursday, 3 September 2015

திருக்கோவில் நிலங்கள் எந்த காலத்திலும் தனியாருக்கோ, அரசுதுறைக்கோ பட்டா மாற்றம் செய்யவோ, பாராதீனம் செய்யவோ இயலாது. திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் அபகரிக்கப்பட்டுவிடும் – திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கரூரில் எச்சரிக்கை.



திருக்கோவில் நிலங்கள் எந்த காலத்திலும் தனியாருக்கோ, அரசுதுறைக்கோ பட்டா மாற்றம்
செய்யவோ, பாராதீனம் செய்யவோ இயலாது.  திருக்கோவில்களுக்கு
சொந்தமான சொத்துக்களை சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் அபகரிக்கப்பட்டுவிடும்  – திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன்
கரூரில் எச்சரிக்கை


கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலக வளாக கூட்ட மன்றத்தில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள்
சபை சார்பில் கோவில் நிலங்கள் மற்றும் திருக்குளங்கள் மீட்பது குறித்த   அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.  ஏற்கனவே திருக்கோவில்களுக்கு சொந்தமான சுமார்
5-ஆயிரம்; ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டும், மற்றும் திருக்குளங்கள் ஆக்கிரமிப்பில்
இருந்து மீட்கப்பட்டும் உள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக கரூர்; மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜெயந்தி தலைமையில் நான்காவது முறையாக நடந்த இந்த கூட்டத்தில் திருத்தொண்டாகள் சபை நிறுவன
தலைவர் ராதாகிருஷ்ணன்  மாவட்ட வருவாய் அலுவலர்
அருணா மற்றும் அறநிலையத்துறை, வருவாய்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சிவனடியார்கள் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர். 
 இந்த  கூட்டத்திற்கு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன்
“தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பது,  ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கூட்டு புல தணிக்கை
செய்யப்பட்டுள்ளது. தற்போது கரூரில் நான்காவது ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் போதுமான
முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளது.  ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள் முதன்முறையாக
கண்டெடுக்கப்பட்டு  ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு
மேல் அளவீடு செய்யப்பட உள்ளது.  இதன் சொத்து
மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும்.  தமிழ்நாடு
முழுவதும் சுமார் 5லட்சம் ஏக்கர் நிலங்கள் திருக்கோவில்களுக்கு சொந்தமான உள்ளது.
2.5லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள் கண்டறிப்பட வேண்டும்  சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் திருக்கோவில்
புறம்போக்கு நிலங்களாக உள்ளது. திருக்கோவில் நிலங்கள் எந்த காலத்திலும் தனியாருக்கோ
அரசுதுறைக்கோ பட்டா மாற்றம் செய்வோ, பாராதீனம் செய்யவோ இயலாது.  திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சரியான
முறையில் கண்காணிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் அபகரிக்கப்பட்டுவிடும்
;.  இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டி: ராதாகிருஷ்ணன்
நிறுவனத்தலைவர் - திருத்தொண்டர்கள் சபை.

No comments:

Post a Comment