கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி செய்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாகூரை சேர்ந்தவர் ஒரு இளம் பெண். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தன் தாயின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாகூர் ஏரியில் தன் ஆடுகளை மேய்ப்பதற்காக அப்பெண்ணின் தாய் தனது மகளுடன் சென்றனர். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பொது ஏரியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகள் அப்பகுதியில் உள்ள நீலகிரி தைல மரங்கள் உள்ள தோப்பிற்குள் சென்றன. இதனால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவதற்காக அவர் தனது மகளை ஏரிக்கரையிலேயே விட்டுவிட்டு தனியாக தைலமர தோப்புக்குள் சென்றுள்ளார். அப்போது, பாகூர் ஏரிக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த கிரியப்பா என்பவரின் மகனான கூலித்தொழிலாளி வெங்கடேஷ் என்பவர் தனிமையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் அப்பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் ஓடி வந்ததையடுத்து வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய வெங்கடேஷை கைது செய்துள்ளனர்.
Wednesday, 2 September 2015
அடப்பாவமே !! மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் கைது!
கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி செய்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாகூரை சேர்ந்தவர் ஒரு இளம் பெண். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தன் தாயின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாகூர் ஏரியில் தன் ஆடுகளை மேய்ப்பதற்காக அப்பெண்ணின் தாய் தனது மகளுடன் சென்றனர். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பொது ஏரியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகள் அப்பகுதியில் உள்ள நீலகிரி தைல மரங்கள் உள்ள தோப்பிற்குள் சென்றன. இதனால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவதற்காக அவர் தனது மகளை ஏரிக்கரையிலேயே விட்டுவிட்டு தனியாக தைலமர தோப்புக்குள் சென்றுள்ளார். அப்போது, பாகூர் ஏரிக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த கிரியப்பா என்பவரின் மகனான கூலித்தொழிலாளி வெங்கடேஷ் என்பவர் தனிமையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் அப்பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் ஓடி வந்ததையடுத்து வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய வெங்கடேஷை கைது செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment