பா.ம.க. சார்பில் செல்போன் மூலம் கட்சி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் புதிய அப் வசதி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. பார் சேஞ்ச் (மாற்றத்திற்கான) என்ற தலைப்பிலான இந்த புதிய வசதியை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆன்டிராய்டு வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த அப்–ஐ டவுன் லோடு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பா.ம.க. வரலாறு மற்றும் என்னைப் பற்றிய தகவல்கள், கட்சியின் லட்சியம், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வற்றை பார்த்துக் கொள்ளலாம். என்னுடன் தொடர்பு கொண்டு பேசி கேள்வி கேட்பதற்கான வசதியும் உள்ளது.
சமூக ஊடகங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த புதிய வசதி மூலம் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது.
அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்த இது கைகொடுக்கும் என்று நம்புகிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து இணையலாம். தி.மு.க.– அ.தி.மு.க. தவிர எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். வரும் தேர்தலில் மாற்றம் வருவது உறுதி பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment