Thursday, 17 September 2015

தமிழ் அழியவோ, அழிக்கவோ முடியாத மூத்த மொழி தமிழ் மொழி எனப்புகழாரம் – காவல் துறை துணை தலைவர் பாரி கரூரில் பேச்சு



கரூரில் திருக்குறள் பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறை துணை தலைவர் பாரி, தமிழ் மொழி அழியவோ, அழிக்கவோ முடியாத மூத்த மொழி நமது தமிழ் மொழி எனப்புகழாரம் சூட்டினார்

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பி.எல்.ஏ.ராம் ரெசிடென்ஸியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவிஞர் வ.சரவணன் எழுதிய பாட்டுத்தென்றல் நூல் வெளியிடப்பட்டது. திருக்குறள் பேரவை புரவலர் பி.டி.கோச் தங்கராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் அனைவரையும் வரவேற்றார். க.பரமத்தி கவிஞர் வ.சரவணன் எழுதிய பாட்டுத்தென்றல் என்னும் கவிதை நூலை வெளியிட்டு பேசிய காவல் துறை துணை தலைவர் அ.பாரி., கவிதை நூல் நல்ல சொல் ஆக்கத்துடன் பொதுமை போற்றியும், சமுதாயச் சீரழிவு சாடலுடன் சிறப்பாக உள்ளது என்றார். தமிழ் ஆறாம் நூற்றாண்டில் தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், வள்ளலார், பட்டினத்தார், கண்ணதாசன், வாலி என பலரால் தமிழும் கவிதையும் காக்கப்படுகிறது என்றார். தமிழை யாராலும், எந்தக்காலத்திலும் அழிக்க முடியாது என்றார். மேலும் தமிழ் மொழியில் ள, ழ, ல, ந, ன இவற்றை சரியாக உச்சரிப்பது நம் கடமை என்றார். முனைவர் கடவூர் மணிமாறன் நூலை மதிப்பீட்டு செய்து உரையாற்றினார். பாவலர் எழில் வாணன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் ஆர்வலர்கள் தென்னிலை கோவிந்தன்,  தமிழன் குமாரசாமி எசுதர், சித்தேஸ்வரன்,  கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், முதல் நூல் பெற்றனர். கவிஞர் வ.சரவணன் விழாவில் ஏற்புரையாற்றினார். கவிஞர் நன்செய் புகழூர் அழகரசன் விழாவில் நன்றி கூறினார். கவிஞர் கன்னல், புலவர் பார்த்தசாரதி, நாகேந்திர கிருஷ்ணன், புளியம்பட்டி இராமசாமி, ப.குமாரசாமி, ஆர்.எஸ்.வையாபுரி., சே,அன்பு, க.ந.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கரூர் தமிழிசை சங்கம், கரூர் திருக்குறள் பேரவை, அரிமா சங்கங்கள், ஞான வள்ளலார் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் கரூர் திருக்குறள் பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment