Tuesday, 15 September 2015

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது: டெல்லியில் மோடி- ரனில் கூட்டாக உரை



தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
இலங்கை பாராளுமன்றத்தேர்தல் கடந்த மாதம் (ஆகஸ்டு) 17–ந்தேதி நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த ரனில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் 4–வது முறையாக பிரதமரான பின்னர், ரனில் விக்ரமசிங்கே முதல் வெளிநாட்டுப்பயணமாக  14–ந்தேதி இந்தியா வந்தார். 3 -நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேநரேந்திர மோடியை சந்தித்தார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பொருளாதரம் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 
பின்னர் இந்தியா- இலங்கை இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில்,  வவுனியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு 200 படுக்கைகள் அனுப்புதல்,  இலங்கையில் அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை இந்தியா ஏற்படுத்துதல், சார்க் செயற்கைகோள் அனுப்புவதில் இந்தியா- இலங்கை இணைந்து செயல்படுதல்,இலங்கையில் சிறிய வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் அடங்கும். 
இதன் பிறகு ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி -ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:-  ”இந்தியா- இலங்கை உறவில் இது வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாகும். தனது முதல் வெளிநாட்டு பயணமாக ரனில் விக்ரமசிங்கே இந்தியாவை தேர்வு செய்ததற்கு நன்றி. நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கே உறவால் இந்தியா- இலங்கை உறவு மேம்பட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் சம உரிமையோடு வாழ  நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக உறவுகள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். வர்த்தகம் முதலீடு போன்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
இலங்கையில் முதலீடு செய்ய இந்தியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். அடிப்படை கட்டமைப்பு, ரயில்வே எரிசக்தி உள்ளிட்டவைகளில் இலங்கை வளர்ச்சி பெறவேண்டும். இலங்கையில் ரனில் விக்ரமசிங்கே அதனை உறுதிப்படுத்த வேண்டும். ஆழ்டலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருநாட்டு மீனவ சங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது”  என்றார். 
இதைதொடர்ந்து ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது:- இலங்கையின் புதிய அரசு இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும். இருநாடுகளின்  உறவை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம். பழைய காயங்களை உற்று நோக்கும் வேளையில் எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். தீவிரவாத எதிர்ப்பு, கடலோர பாதுகாப்பு போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுவோம். 
ஜெனிவா மநாடு மற்றும் மனித உரிமை குறித்து விவாதித்தோம்.இலங்கையில் அனைத்து தரப்பினரும் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இருநாடுகளும் ஒத்துழைப்பு அளிக்கும். தீவரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படவும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருநாடுகளின் பொருளாதர உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் இந்தியாவுடன் பேசி உள்ளேன். மீனவர்கள் பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றார்.

No comments:

Post a Comment