கரூர் மாவட்டம்,
குளித்தலையை அடுத்த இராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதியை சார்ந்த பரளி பகுதியில் வசிப்பவர்
ஜீவானந்தம், இவருடைய மனைவி மலர்கொடி, இத்தம்பதியினரின் இரண்டாவது மகள் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது)
செல்வி ஆவார். குளித்தலை கோட்டைமேடு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று
வந்த போது சைக்கிளில் குளித்தலை கோட்டைமேட்டிற்கும், அச்சிறுமியின் ஊரான பரளிக்கு சென்று
வந்த போது, கடந்த வருடம் (2014), ஜீன் மாதம் 20 ம் தேதி மைலாடி என்ற இடத்தில் வாழைத்தோப்பில்
நின்று கொண்டிருந்த அடைக்கன் என்ற வாலிபர் புல்லு கட்டு தூக்கி விடு பாப்பா என கூறி
அச்சிறுமியை வாழைத்தோப்பிற்கு கடத்தி சென்று கற்பழிக்க முயற்சிச் செய்துள்ளான். இச்சம்பவம்
தமிழக அளவில் பெரும் பரபரப்பான நிலையில் இச்சம்பவம் குறித்த விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்திற்கு
விசாரணைக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றவாளி அடைக்கன்
என்ற வாலிபருக்கு சிறுமியை கற்பழித்து பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றதற்கு 7 வருடமும்,
கொலை முயற்சி செய்ததற்காக 1 வருடமும் என மொத்தம் 8 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து
தீர்ப்பு வழங்கினார். பள்ளிச்சென்ற சிறுமியை கற்பழிக்க முயற்சி செய்த சம்பவத்தையடுத்து,
இத்தண்டனை வரவேற்பு அளித்தாலும், இது போன்ற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க
உயர்நீதிமன்றத்திற்கு அப்பீலுக்கு செல்ல உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய
வழக்கறிஞர் பொன்.முருகேசன் தெரிவித்துள்ளார்.
பேட்டி : பொன்.முருகேசன்
– வழக்கறிஞர் - திருச்சி
No comments:
Post a Comment