Thursday, 17 September 2015

நடிகர் கிருஷ்ணா மீது மனைவி வரதட்சனை கொடுமை புகார்



கழுகு, யாமிருக்க பயமேன், யட்சன், வானவராயன் - வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது அவரது மனைவி ஹேமலதா வரதர்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கழுகு, யாமிருக்க பயமேன், யட்சன், வாணவராயன், வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சகோதரருமானவர் நடிகர் கிருஷ்ணா இவருக்கும் கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன், வாசிகி என்பவர்களது மகள் ஹேமலதா என்கிற சைவல்யா என்பவருக்கும் 2013ல் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. கடந்த 2014-ல் இருவீட்டார் சம்மதத்துடன் மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 300 பவும் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக ஹேமலாதாவின் பெற்றோர் உறுதியளித்துள்ளனர். திருமணத்தின்போது 118 பவுன் நகையும் 32 லட்சம் பணம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் மீதி உள்ள 182 பவுன் நகையை கேட்டு நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மதுபாலா, குலசேகரன் ஆகியோர் தன்னை வரதட்சனை கொடுமைப்படுத்துவதாக துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் புகாரில் நடிகர் கிருஷ்ணா தன்னை மாடன் உடைகளை அணியச் சொல்லி கொடுமைப்படுத்துவதாகவும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் இது குறித்து கேட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாகவுன் புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துரையினர் நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

No comments:

Post a Comment