Thursday, 3 September 2015

மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு



சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தின்  தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் தலைமையில் சென்னை வெண்டர் அசோசியேஷன் தலைவர் மதியழகன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் இன்று காலை நடத்தினர். சென்னை மெட்ரோ ரயில் பணியில் மண் அள்ளும் 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் கடந்த 3 மாதமாக பணியில் ஈடுபடுத்தப்படாமல் அங்கே முடங்கி கிடக்கிறது. மேலும், கட்டுமான பணிகளில்  ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ. 76 கோடி பணம் கிடைக்கவில்லை எனவும், இயந்திரங்களை திருப்பி ஒப்படைக்கும்படியும் கேட்டு இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஜெனார்த்தனன் நிருபர்களிடம் கூறியதாவது:- ரூ. 76 கோடி பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். மேலும், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள்  அ்ங்கேயே இருப்பதால் துருப்பிடித்து வீணாகி போகும் நிலை உள்ளது. முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை துவங்கி இருக்கிறோம். அண்ணாநகர் துணை  கமிஷனர் மனோகரன் எங்களை மெட்ரோ ரயில் நிர்வாகத்தியிடம் பேச அனுமதி பெற்று தந்துள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால்  வரும் 9ம் தேதி நாங்கள், எங்களது பணியாட்கள் குடும்பத்துடன் இதே இடத்தில் உண்ணாவிரதம் தொடங்குவோம். அதற்கு அடுத்த கட்டமாக வரும் 18ம் தேதி  சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment