இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதில் அமெரிக்காவின் நிலைபாட்டைக் கண்டித்தும் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என்கிறது அமெரிக்கா. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஐ.நாவின் நிலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிரகா முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Thursday, 3 September 2015
இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி - வி. சி ஆர்ப்பாட்டம்
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதில் அமெரிக்காவின் நிலைபாட்டைக் கண்டித்தும் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என்கிறது அமெரிக்கா. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஐ.நாவின் நிலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிரகா முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment