Wednesday, 2 September 2015

கரூரை அடுத்த தென்னிலையில் பணம் வைத்து சூதாடிய 28 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ 1.12 லட்சம் ரொக்க பணம் , 3 கார்கள் 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.



கரூரை அடுத்த தென்னிலையில் பணம் வைத்து சூதாடிய 28 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ 1.12 லட்சம் ரொக்க பணம் , 3 கார்கள் 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.கரூர் அருகே உள்ள க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னிலை வேலாயுதம்பாளையத்தில் பாலசுப்பிரமணியம்  மற்றும்  வெண்ணிலா இவர்களுக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் கடந்த சில மாதங்களாக பணம் வைத்து சூதாடியதாக புகார் வந்ததையடுத்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில்
க.பரமத்தி காவல் ஆய்வாளர் அருள்மொழி அரசு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று  இரவு தென்னிலையில் உள்ள
மனமகில் மன்றத்தில் சக்திவேல் தலைமையில் 28 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவர காவல் துறையினர் உள்ளே புகுந்து சூதாடியவர்களை 28 நபர்களையும் அவர்களிடமிருந்து சுமார் ரூ 1.12 லட்சம் ரொக்க பணம் , 3 கார்கள் 3  இரு சக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்தனர். கரூர் குற்றவியல் நீதிமன்ற 2ல் ஆஜர்படுத்தி நீதிபதி ரேவதி 28 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து. கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் பாலசுப்பிரமனியம் , வெண்ணிலா மற்றும் இளங்கோ ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment