கரூர் வெண்ணைமலை
சேரன் பள்ளியின் மாணவ, மாணவிகள் கரூர் அருகே
உள்ள காகித புரத்தில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு காகித ஆலையில் நடைபெற்ற
Talent Expo 2015 என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல்வேறு போட்டிகளிலும், கலைநிகழ்ச்சிகளிலும்
பங்கு பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பை சேரன் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர். இந்த
டேலண்ட் எக்ஸ்போ 2015 நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
73 பள்ளிகள் பங்கேற்றன. இந்த எல்லா போட்டியிலும் ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டம்
வென்று பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பெரும் மதிப்பை ஏற்படுத்திய
அம்மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் வெண்ணைமலை சேரன் பள்ளியின் தலைவர் பி.எம்.கருப்பண்ணன்,
பள்ளியின் ஆலோசகர் பி.செல்வத்துரை, பள்ளியின் நிர்வாகி கே.பெரியசாமி, பள்ளியின் தாளாளர்
கே.பாண்டியன், பள்ளியின் முதல்வரும், தேசிய நல்லாசிரியர் விருது பெரும் வி.பழநியப்பன்
மற்றும் ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment