Tuesday, 15 September 2015

வை.கோ விற்கு கூட்டணியே தேவையில்லை தொண்டர்கள் படை இருந்தாலே போதும் என சொல்லும் அளவுக்கு நடைபெற்ற மாநாடு - மக்களைத் திரட்டி போராட்டம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மதிமுக கூட்டத்தில் நிறைவேற்றம்







திருப்பூர் மாவட்டம். பல்லடத்தில் அண்ணாவின் 107 ஆவது பிறந்தநாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர வேண்டும், நிலம் கையகப்படுத்தம் சட்டம் முழுனையாக கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு, தமிழகத்தில் சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மதிமுக மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. அதில் 3வது தீர்மானத்தில்,  

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் உயிர்த் தியாகம் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தாய்க்குலத்தவர் மற்றும் இளைஞர்கள் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் விளைவாக டாÞமாக் மதுக்கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. கலிங்கப்பட்டி கிராமத்தில் கழகப் பொதுச்செயலாளரின் தாயார் மாரியம்மாள் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு நடத்திய அறப்போராட்டமும், பொதுச்செயலாளர் வைகோ நடத்திய அறப்போராட்டமும் தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான எழுச்சிமிக்க போராட்டத்திற்கு ஊக்கம் அளித்தது. 

தமிழகத்தின் பழமை வாய்ந்த பண்பாட்டுப் பெருமைகள் சீரழிந்து வருவதும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும், சின்னஞ் சிறிய பிஞ்சுகள் கூடக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி எதிர்காலம் பாழாவதும் மிகுந்த கவலை தருகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2014 இல் நடைபெற்ற சாலை விபத்துகளில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் குடிப்பழக்கம்தான் என்பதும் அதிர்ச்சி தருகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் உடல் நலன் கெட்டு, வாழ்நாள் நோயாளிகளாக மாறி வரும் அவலம் தொடர் நிகழ்வுகளாகி விட்டன. எனவே தமிழக அரசு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்று இந்த மாநாடு அறிவிக்கிறது. என கூறியுள்ளது. மேலும் இந்த மாநாட்டிற்கு வந்த கும்பல் தொண்டர்கள் எந்த வித ஆரம்பரம் இல்லாமல், அமைதியாக பங்கேற்றதோடு, தொண்டர் படைகளே போதும், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியே தேவையில்லை என்ற அளவிற்கு பேசப்பட்டது.

No comments:

Post a Comment