திருப்பூரில் ம.தி.மு.க. மாநாடு இன்று காலை துவங்கியது. மாநாட்டில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து வருகின்றனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பினாங்கு துணை முதல்வர் இராமசாமி மற்றும் திராவிடர் கழக வீரமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 107வது பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநாட்டு திடல் முன் கட்சி கொடியை கோவை மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஏற்றி வைத்தார்.
அதை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் தொண்டரணியினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். திராவிட இயக்க நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமியும், மது ஒழிப்பு வைகோ பிரசாரப் படக்கண்காட்சியை பொருளாளர் மாசிலாமணியும் துவக்கி வைத்தனர்.
மாநாட்டில், பெரியார் படத்தை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, அண்ணா படத்தை கவிஞர் காசி ஆனந்தன், மொழிப்போர் தியாகிகள் படத்தை கவிஞர் தமிழ்மறவன், டாக்டர் நடேசனார், பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், ஈழத்தியாகிகள் படத்தை திராவிடர் விடுதலை இயக்கத்தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புகழேந்தி தங்கராஜ், டி.டி.அரங்கசாமி, குமரி விஜயகுமார் திறந்து வைத்து பேசுகின்றனர்.
தொடர்ந்து நடக்கும் மாநாட்டில், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சிறப்புரையாற்றுகிறார். அதை தொடர்ந்து மாநாட்டு பிரகடன உரையை வைகோ இரவு நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிப்பதாக வைகோ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த மாநாடு, மேலும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

No comments:
Post a Comment