தேசிய அளவில் நடைபெற்ற
செயல்திட்ட போட்டியில் ஆச்சிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலந்து கொண்டு வேஷ்ட்
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கொண்டு அதில் மணல் நிரப்பி சுற்றுச்சூழலை காக்கும்
விதமாகவும், செங்கலுக்கு பதிலாக மாற்று திறன் கொண்ட பொருளாகவும் சுவர் எழுப்பியுள்ளனர்.
அந்த சுவர் எழுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குழுவில் ஒரு குழுவாக
வெற்றி பெற்று அதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான
போட்டியில் மாணவி மேகவர்ஷினி நெறியாளராக ஆசிரியர் சசிரேகா குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் இம்மாதம், 25 மற்றும் 26 தேதிகளில் மெக்சிகோ வில் நடைபெறும் அகில
உலக கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 40 நாடுகளை சார்ந்த
மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தமிழின் பெருமையை பறைசாட்டும் வகையில் வழங்குவதற்காக
தமிழ் ஆங்கிலம், ஆங்கில உரையுடன் கூடிய திருக்குறள் நூல்களை கரூர் திருக்குறள் பேரவை
செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் புரவலர் பாலாஜி சண்முகம் மெக்ஷிகோ விற்கு செல்லும்
ஆசிரியையிடம் வழங்கினார். இந்த ஆசிரியை மெக்சிகோ விற்கு சென்று அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு
இந்த திருக்குறள் நூல்களை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment