Saturday, 19 September 2015

காவல்துறை வரலாற்றிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம மரணம் - டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை சி.பிஐ விசாரிக்க கோரிக்கை






நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா (வயது 28). இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தமிழகம் முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத் திய  ஓமலூர் என்ஜினீயர் கோகுல் ராஜ் கொலை வழக்கை டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தான் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் 14 பேரை அவர் கைது செய்தார். முக்கிய  குற்றவாளியான யுவராஜை இன்னும் கைது செய்யவில்லை. அவர் போலீசை மிரட்டும் விதமாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பி வந்தார். அவரை கைது செய்ய முடிய வில்லையே என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தது. அவரை கைது செய்யக்கூடாது என்று இன்னொரு தரப்பில் இருந்து மிரட்டல் வந்தது. 

அவரை கைது செய்யாமல் மெத்தனம் காட்டுகிறீர்கள் என்று இன்னொரு அமைப் பிடம் இருந்து மிரட்டல் வந்தது. விரைவில் கைது செய்யாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வும் , போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறி வந்தனர்.

பொது பிரச்சினைக்காக திருச்செங்கோடு நகர்ப் பகுதி களுக்கு சென்றபோது பொது மக்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தனர். என்ஜினீயர் கொலை வழக்கில்  முக்கிய குற்ற வாளியை பிடிக்க வில்லையே என்றும் கேள்வி கேட்டனர். 

இப்படி நெருக்கடிகளுக்கு மத்தியில்  போலீஸ் வேலை வேண்டாம் என்று நினைத்து சொந்த ஊருக்கு சென்றபோது குடும்பத்தினர் போலீஸ்  வேலையை விடக் கூடாது, இப்படிப்பட்ட சில மிரட்டல்கள் வரத்தான் செய்யும் அதற்கெல்லாம் பயந்து நாம் ஒதுங்கி விடக்கூடாது என்று குடும்பத்தினர் கூறியதால் அவர் மீண்டும் நேற்று காலை பணிக்கு வந்தார். 

இந்த நிலையில் ஒரு உயர் அதிகாரி டி.எஸ்.பி.க்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி பல நெருக்கடிகளால் மன அழுத்தம் ஏற்பட்ட அவர் இந்த சோக முடிவை எடுத் திருக்கலாம் என்று கூறப்படு கிறது. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது டைரியில் 10 பக்க அளவிற்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். 
அதில் அப்பா-அம்மா, அக்கா, நெருங்கிய தோழிகள் 3 பேர் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி இருந்தார். உயர் அதிகாரிக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடித விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, மற்றும் உறவி னர்கள் இன்று சேலம் வந்தனர். விடுதலை சிறுத்தைகள் மற்றும் மக்கள் தேசம் கட்சியினர், தலித் அமைப்பு நிர்வாகிகள்,  தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. மகளின் மரனம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை ரவி கூறினார். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே மகளின் உடலை பெற்றுக் கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

விஷ்ணுபிரியாவின் சாவுக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கள் மற்றும் தலித் அமைப்பு களின் நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத் திரி வளாகத்தில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் தலித் அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்கள். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக விசாரணை அதிகாரி  நியமிக்கப்பட் டுள்ளார்.  ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜு விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார் என்று அறி விக்கப்பட்டுள்ளது.தற்போது விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு 174-வது (மர்ம சாவு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. 
இன்று பகல் 1 மணி வரை பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. பிரேத பரிசோதனை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை கையெழுத்து போட மறுத்து விட்டார். இதனால் பிரேத பரிசோதனை நடை பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

மகள் விஷ்னுபிரியா இறப்பு குறித்து, அவரது தந்தை ரவி இன்று சேலம் அரசு மருத்துவமனையில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய மகள் நேர்மையான, தைரியமான வள். குடும்ப பிரச்சினை ஏதுவும் காரணம் இல்லை. காதல் விவகாரமும் எதுவும் இல்லை. திருமணம் பற்றி கேட்டப்போது, உடனே மாப்பிள்ளை பாருங்கள் என்றும் எந்த தடையும் தெரிவிக்கவில்லை.

மகள் சாவை திசை திருப்புவதற்காகவே குடும்ப சூழ்நிலை என்று அவர்கள் (போலீஸ் அதிகாரிகள்) தெரிவிக்கின்றனர். ஆனால் அது மாதிரி எதுவும் இல்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார், மன உளைச்சலுடன் காணப் பட்டார்.என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தரப்பிலும், யுவராஜ் தரப்பிலும் டார்ச்சர் இருந்து வந்தது.

அவர் தற்கொலை செய்தபோது 15 பக்கம் கொண்ட கடிதம் எழுதியிருந்ததாக கூறினார்கள். ஆனால் என்னிடம் 4 பக்கம் மட்டும் காண்பித்தார்கள். அது என்னுடைய மகள் கையெழுத்து என்று தான் கூறினேன். மீதி உள்ள பக்கங்களை என்னிடம் காண்பிக்கவில்லை.

இது குறித்து விசாரணை நடத்த உள்ளூர் போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நடத்தினால் தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறி னார். சி.பி.ஐ. விசாரணை கோரி அவர் உள்துறை செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment