Friday, 18 September 2015

வரும் சட்டமன்ற தேர்தலிலும் தமிழக முதல்வராக ஜெ ஆகவும், தமிழகத்தில் நிரந்தர முதல்வராக ஜெ ஆக வேண்டி தனது 52 வது மாத சம்பளத்தொகையை கோயிலுக்கு வழங்கிய எம்.எல்.ஏ காமராஜ் – கரூர் அருகே திகைப்பு


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி (தனி) எம்.எல்.ஏ ஆனவர் எஸ்.காமராஜ் அ.தி.மு.க வில் போட்டியிட்டு பெரும் வாரியான வித்யாசத்தில் வெற்றி பெற்ற இவர் தனது முதல் மாத சம்பளத்தொகையிலிருந்து இது வரை மாத மாத சம்பளத்தொகையை முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பெயரில் வழங்கி வந்தார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்து உதவி கோருபவர்கள், நரிக்குறவர்களின் குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவு, எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் என பல தரபட்ட மக்களுக்கு தனது 51 மாத சம்பள தொகையை கொடுத்து வந்த எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் இன்று காலை தனது 52 வது மாத சம்பள தொகையையும் கொடுத்தார். தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வேண்டி கரூர் அருகே உள்ள கட்டளை ரெங்கநாதபுரம் பகவதி அம்மன் கோயிலுக்கும், கிருஷ்ணராயபுரம் பகுதியை அடுத்த பிச்சம்பட்டி பாம்பளம்மன் கோயில் திருப்பணிகளுக்காக ரூ 55 ஆயிரம் கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமைகள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலவகை பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் அன்னதானத்தையும் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தொடக்கி வைத்தார். மாத மாதம், சம்பள தொகையை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வரும் எம்.எல்.ஏ வின் வீடு, வாகனம், நகைகள் ஆகியவன கடனில் தத்தளிப்பது இவர் மறைத்தாலும் அவ்வப்போது வங்கிகளில் இருந்து வரும் நோட்டீஸ்கள் காட்டிக் கொடுக்கிறது.


No comments:

Post a Comment