கரூரில் நூறாண்டு பழமை மிக்க வைஷ்ணவ ஆலயங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கிருஷ்ணர் ராதை வேடம் புரிந்து குழந்தைகள் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றுடன் வரும் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி, பண்டரிநாதர் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி தர கண்ணனின் லீலைகளான உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நடைபெறும், விழாவின் போது, ஆலயத்திற்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வரும் 100 குழந்தைகளுக்கு கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. சிறப்பு அலங்காரத்துடன், வாணவேடிக்கை, மேளதாள வாத்தியங்கள் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்று கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகில் ஆதிகிருஷ்ண புரம் மக்கள் ஏற்பாட்டில் உறியடி நடைபெறும், விழாவிற்கான ஏற்பாட்டினை பஜனை மட டிரஸ்டிகள் குணசேகரன், வினோத்குமார், சதீஸ்குமார், கொளரவ தலைவர் மேலை.பழநியப்பன் தலைவர் எஸ்.சந்தான கிருஷ்ணன், பாலாஜி, ஜிபிஆர்.சிவசங்கர், மோகன்ராம், உறியடி கமிட்டியார் மற்றும் மாரி இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இத்தகவலை கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார்.
Tuesday, 1 September 2015
கரூர் பண்டரிநாதன் கோயிலில் கோகுலாஷ்டமி விழா வரும் 6 ம் தேதி நடக்கிறது - மேலை.பழநியப்பன் தகவல்
கரூரில் நூறாண்டு பழமை மிக்க வைஷ்ணவ ஆலயங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கிருஷ்ணர் ராதை வேடம் புரிந்து குழந்தைகள் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றுடன் வரும் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி, பண்டரிநாதர் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி தர கண்ணனின் லீலைகளான உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நடைபெறும், விழாவின் போது, ஆலயத்திற்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வரும் 100 குழந்தைகளுக்கு கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. சிறப்பு அலங்காரத்துடன், வாணவேடிக்கை, மேளதாள வாத்தியங்கள் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்று கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகில் ஆதிகிருஷ்ண புரம் மக்கள் ஏற்பாட்டில் உறியடி நடைபெறும், விழாவிற்கான ஏற்பாட்டினை பஜனை மட டிரஸ்டிகள் குணசேகரன், வினோத்குமார், சதீஸ்குமார், கொளரவ தலைவர் மேலை.பழநியப்பன் தலைவர் எஸ்.சந்தான கிருஷ்ணன், பாலாஜி, ஜிபிஆர்.சிவசங்கர், மோகன்ராம், உறியடி கமிட்டியார் மற்றும் மாரி இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இத்தகவலை கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment