Monday, 14 September 2015

விஸ்வரூபமெடுக்கிறது பாட்டி சித்தர் விவகாரம் - சித்தர் பாட்டியை மீட்டுத்தரக்கோரியும், சித்தர் பாட்டியை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்களே சேர்ந்து மனு - பரபரப்பு


கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, சித்தர் பாட்டியாக கருதப்படும் மூதாட்டியை, ஜீவசமாதியாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், அதை தடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் ஒரு தரப்பினர் மனு கொடுத்தனர்.  இந்நிலையில் பாட்டி சித்தரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளதாகவும், அந்த பாட்டி சித்தரை வைத்து பணம் சம்பாதிக்கும் பட்சமாக ஒரு கும்பல் செயல்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்த சம்பவம் கரூர் பகுதியில் மட்டுமில்லாமல் ஆன்மீக அன்பர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, நூறு ஆண்டுகளை கடந்த, சித்தர் பாட்டி என்ற ஒருவர் வசித்து வருகிறார். கொடுமுடியை சார்ந்த மருத்துவர் நடராஜனின் தோட்டத்தில் கடந்த 6 ½ வருடங்களாக ஒரு சித்தர் பாட்டியை அப்பகுதி மக்கள் பராமரித்து வந்தனர்.  மேலும் இந்த பாட்டியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக சென்னைமதுரை, ஈரோடு, திருப்பூர், கரூர் என தமிழகம் மட்டுமில்லாமல், பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சித்தர்பாட்டியை சந்திந்து ஆசிப்பெற்று சென்றனர். இந்நிலையில், "சித்தர்பாட்டியை ஜீவசமாதியாக்க ஒரு கும்பல் முயற்சி செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும்' என, பொதுமக்கள்,  ஒரு தரப்பினர் கடந்த வாரம் கலெக்டர் ஜெயந்திடம், மனு அளித்தனர்.
அந்த, மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் தாலுகா, மோகனூர் காட்டுப்புத்தூர் அருகே, சுண்டச்செல்லியம்மன் கோவில் அருகே பாட்டி சித்தர், நெடுங்காலமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவர்களுடைய பெயர், பிறந்த ஊர், உறவினர் என்ற எந்த பூர்வீக தகவல் யாருக்கும் தெரியாது. அவருடைய ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாரும் இல்லை. அவரிடம் பேசினால், சித்தர்களுக்கே உரிய பரிபாஷையில், யாருக்கும் புரியாமல் பேசுவார். நடக்க முடியாது. நடக்க முடியாமல் இருந்தாலும், அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த டாக்டர் நடராஜன், பக்தர்களோடு பக்தர்களாக சென்று, பாட்டி சித்தரை பார்த்து வருவது வழக்கம். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், சித்தர்பாட்டியை, கரூர் அடுத்த, நொய்யல் அருகே உள்ள விவசாய நிலத்துக்கு அழைத்து வந்தார். சென்னை, பெங்களூரு, திருப்பூர், கரூர், ஈரோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து பாட்டியை சந்தித்து சென்றனர்.  இந்நிலையில் கோபியை சார்ந்த சண்முக சுந்தரம் என்பவர் பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பாட்டி சித்தரை அவருடைய சம்பந்தமில்லாமல், ஜீவ சமாதி ஆக்க முயற்சி செய்வதாகவும், இதனால் அவருடைய நிலம் பொன் விளையும் பூமியாகும் என நோக்கத்தில் செயல்படுவதாக சண்முகசுந்தரம் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் நாங்கள் பாட்டி சித்தரை சொந்த தாயாகவும் பராமரித்து வருகிறோம் என்றும், தற்போது உடல் நலக்குறைவை ஏற்படுத்தி கோபியை சார்ந்த சண்முக சுந்தரம் என்பவர் பொய்யான புகாரை அளித்துள்ளார் என புகார் அளித்ததோடு, பாட்டி சித்தரை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென ஊர் பொதுமக்களே கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாட்டி பெயரை கொண்டு பணம் சம்பாதிக்க அந்த தனி ஒரு நபர் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பகீரிங்க புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாட்டி சித்தர் கரூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாட்டி சித்தர் என்பவர் சக்தி மிக்கவராகவும், நடைபெறுவதை முன் கூட்டியே சொல்லும் ஆற்றல் படைத்தவர் என்று கூறிக்கொண்டு செல்லும் நிலையில் இந்த உண்மை அறிந்த மற்ற உண்மையான பாட்டி சித்தர் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : மருத்துவர் க.நடராஜன் - கொடுமுடி


No comments:

Post a Comment