இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி சர்வதேச விசாரணை மேற்கொள்ள கோரி தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர்.
துரைமுருகன் (தி.மு.க.):- முதல்-அமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். இது இப்போது தேவையான ஒன்றாகும். ஆரம்பத்தில் சர்வதேச விசாரணை தேவை என கூறி வந்த அமெரிக்கா இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் நாம் நமது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது.
இந்தியாவே தீர்மானம் கொண்டு வருவதுடன் அந்த சமயத்தில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால் அதை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கு கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. தி.மு.க.வும் பல மாநாடுகளில் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.
பொருளாளர் மு.க.ஸ்டா லின், டி.ஆர்.பாலு ஆகியோர் ஜெனீவா சென்று மனு கொடுத்து இருக்கிறார் கள். எனவே இப்போது இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற் கிறேன்.
பாண்டியராஜன் (தே.மு.தி.க.):- இலங்கை தமிழர் களுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இப்போது கொண்டு வந்துள்ளது மிக முக்கிய தீர்மானம் ஆகும். இதற்காக முதல்- அமைச்சரை பாராட்டு கிறேன்.
பிரின்ஸ் (காங்.):- இலங்கையில் நடைpeற்ற ஈழத்தமிழர் படுகொலையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. படுகொலையை நிகழ்த்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு. இலங்கை தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.):- ஈழத்தமிழர் படுகொலையை நிகழ்த்திய இலங்கை, அதில் இருந்து தப்பிக்க இடம் கொடுக்காத வகையில் சர்வதேச அளவில் விசாரணை அவசியம் தேவை என்பதை தீர்மானம் வலியுறுத்துகிறது. அதை வரவேற்கிறோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூ.):- இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அமெரிக்கா இப்போது ஆதரவு காட்டி தப்பிக்க வைக்க முயல்கிறது. அமெரிக்கா தனது நிலைப் பாட்டை இப்போது மாற்றி இருந்தாலும் இந்தியா ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வற் புறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
இதேபோல் கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), சொகு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் தீர்மானத்தை பாராட்டி ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
No comments:
Post a Comment