Sunday, 13 September 2015

விளையாட்டுத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தி வருவது இந்திய அளவில் தமிழக முதல்வர் மட்டுமே ! பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துறை அவர்கள் புகழாரம்


மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் / வீராங்கனைகளுக்கு பரிசு  வழங்கி   எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தி வருவது இந்திய அளவில் தமிழக முதல்வர் மட்டுமே ! பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துறை புகழாரம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட  விளையாட்டு மைதானத்தில்  13.09.2015 இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான  கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துறை அவர்கள்  வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி பேசுகையில்,

                          உலக அளவில் தமிழகம் அனைத்துத்துறையிலும் முதன்மை மாநிலமாக  விளங்கும் வகையில்  மாண்புமிகு தமிழக முதல்வர்  அம்மா அவர்களின் திட்டங்கள் சிறந்து விளங்கி வருகிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறைக்கும்  மாண்புமிகு தமிழக முதல்வர்  அம்மா அவர்கள் பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருவதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறார்கள்.   இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்  என்பதே நோக்கமாகும்.                          
 அதுமட்டுமன்றி அரசுத்துறை அலுவலர்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும் உடற்பயிற்சி மிக அவசியமான ஒன்றாக இருப்பதால் அவர்களுக்கும் போட்டிகள் நடத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும்  வகையில் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறன்றன. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க, மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கு  கபடிப் போட்டி நடத்த திட்டமிட்டு 11.09.2015 முதல் 13.09.2015 வரை  போட்டி நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இங்கு நடைபெற்ற போட்டிகள் 24 மாவட்டங்களிலிருந்து கல்வித்துறை, பொது சுகாதாரம், வேளாண்மைத்துறை , சென்னை தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் , சென்னை மாநகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், நீதித்துறை, பேரூராட்சித்துறை, ஊரகவளர்ச்த்துறை, என பல்வேறு துறைகளில் இருந்து ஆண்கள் பிரிவு 24 அணிகளும் , பெண்கள் பிரிவில்  4 அணிகளும்  கலந்து கொண்டு நிறைவாக  ஆண்கள் பிரிவில் தேனி மாவட்டம் முதலிடத்தையும்,  புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாவது இடத்தையும், பெண்கள் பிரிவில்  துhத்துக்குடி   மாவட்டம் முதலிடத்தையும், கரூர் மாவட்டம் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்கள். மேலும்  பங்குகொண்ட அனைத்து மாவட்ட  வீரர்/வீராங்கனகைளுக்கும் மாவட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன், இதே போல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போட்டிகளிலும் அனைத்து வகையான விளையாட்டிலும், வெற்றி பெறுவதுடன் விளையாட்டு என்பது தங்கள் உடல்நிலை முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாகவும் இருந்திடும் . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்  விளையாட்டுத்துறைக்கு வழங்கும் திட்டங்களை மிக  நல்ல முறையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனையாளராக திகழ்ந்திட வேண்டும் என மாண்புமிகு பாராளுமன்ற  துணை சபாநாயகர்  டாக்டர் மு.தம்பித்துறை அவர்கள் தெரிவித்தார்.
                      பின்னர் மாநில அளவில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற தேனி  மாவட்ட வீரர்களுக்கு  முதல்பரிசுக்கான வெற்றிக்  கோப்பையையும், இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர்களுக்கான வெற்றி கோப்பையையும், மகளிர் பிரிவில் முதலிடம்  பெற்ற  துhத்துக்குடி மாவட்ட வீராங்கனைகளுக்கான வெற்றிக்  கோப்பையையும், இரண்டாமிடம் பெற்ற கரூர் மாவட்ட வீராங்கனைகளுக்கு வெற்றிக் கோப்பையையும்,  பாராளுமன்ற  துணை சபாநாயகர்  டாக்டர் மு.தம்பித்துறை அவர்கள் வழங்கினார்.
                            இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்  அருணா,   மண்டல முதுநிலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கீதாஞ்சலி ரத்னமாலா , மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி,  கரூர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ்,  நகர்மன்ற உறுப்பினர்கள்,  நெடுஞ்செழியன் , சாந்தி கந்தசாமி,  தான்தோனி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்  பாஸ்கரன்  கால்பந்து பயிற்றுநர் நோயலின்ஜான்,  ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்றுநர் திரு முத்து,   மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment