Tuesday, 1 September 2015

கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் - ஜனாதிபதி விருது முன் தேர்வு முகாம்

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவருமாகிய மு.ராமசாமி அவர்கள் வழிகாட்டுதலில், பரணி பார்க் சாரணர் மாவட்ட ஜனாதிபதி விருது முன் தேர்வு முகாம் கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இம்முகாமின் நிறைவு விழா பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட முதன்மை ஆணையர் எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட சாரணீய ஆணையர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.

பரணி பார்க் மாவட்ட சாரண ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றுகையில், “இம்முகாமில் பரணி பார்க், பரணி வித்யாலயா, சேலம் மாவட்டம் மற்றும் கடலூர்  மாவட்டம்  பள்ளிகளைச் சேர்ந்த 188 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக முன் தேர்வு முகாமை நிறைவு செய்துள்ளனர். இதில் பரணி பார்க், பரணி வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 58 சாரணர்கள் மற்றும் 76 சாரணீயர்கள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 சாரண, சாரணீயர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 சாரண, சாரணீயர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் முதலுதவி, முகாம் வனக்கலை, நாட்டுப்பற்று, தேசியப்பாடல்கள், சாரணர்இயக்கம்பற்றிய வரலாறு மற்றும்வழிமுறைகள், சீருடை, தேசிய கீதம், கொடி மா¢யாதை, அணி நடை பயிற்சி, தலைமைப் பண்பு, சர்வ மத வழிபாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் திறமைகள் சோதனை செய்யப்பட்டது. இத்தேர்வில் தகுதி பெற்ற சாரண, சாரணீயர்களுக்கு வரும் மாதத்தில் நடக்கவிருக்கும் மேதகு ஜனாதிபதி விருது முகாமில் லந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது என்பது மகிழ்ச்சிக்கும், பெருமைக்குரியதாகும்” என்று கூறினார் .

மேலும்இம்முகாமில்பாரத சாரணர் இயக்க மாநில தலைமையகத்தில் இருந்து தேர்வு அலுவலர்களாக சக்திவேல், செல்வராஜ், வேணுகோபால், ப்யூலா, மஞ்சுளா   ஆகியோர் மாணவர்களின் திறமைகளை மேற்கூறிய பல்வேறு தலைப்புகளில் தேர்வு நடத்தினர்

இவ்விழாவிற்கு பரணி பார்க் மாவட்ட துணை ஆணையர்(சாரணர்) எஸ்.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை ஆணையர்(சாரணர்) கே.சேகர் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் மாவட்ட துணை ஆணையர்(சாரணர்) எம்.சுரேஷ், செயலர் ஆர்.பி¡¢யா, மாவட்ட அமைப்புஆணையர்கள் ஆர்.ஹேமலதா, பி.சரஸ்வதி, மாவட்ட பயிற்சி ஆணையர்கள் எஸ்.கவிதா, கே.ராணி ஆகியோர் செய்திருந்தனர்.


புகைப்படம்:  பரணி பார்க் பள்ளியில் நடைபெற்ற மேதகு ஜனாதிபதி விருது முன் தேர்வு முகாமில் சாரணீயர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் காட்சி.

No comments:

Post a Comment