Tuesday, 1 September 2015

நாடு தழுவிய வேலை நிறுத்தம் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் வேலை வாய்ப்பை அதிக படுத்த வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறற வேண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் எனபது உள்பட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து 10  மத்திய தொழிற்சங்கள் இன்று  நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.

தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள், இயங்க வில்லை. தனியார் டாக்சிகள் மற்றும் கார்கள் இயங்குகின்றன.

கடைகள், ஓட்டல், சிறிய டீ கடைகள் அடைகபட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

மருத்துவமனை உளபட முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநிலத்தில் குறிப்பிடபடும் அசாம்பாவிதங்கள் இதுவரை ஏதுவும் நிகழ்ந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை.   

No comments:

Post a Comment