Tuesday, 1 September 2015

மேலைச் சிவபுரி மீனாட்சி சொக்கேஷர் ஆலயத்தில் ஆவணி மூலத்திருவிழா - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு


மேலைச் சிவபுரி மீனாட்சி சொக்கேஷர் ஆலயத்தில் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

மேலைச் சிவபுரி மீனாட்சி சொக்கேஷர் நகரச் சிவன் கோயிலில் ஓவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் 10 நாட்கள் ஆவணி மூல உற்சவப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டு, ஆவணி முதல் நாள், காப்பு கட்டுதலுடன் தொடங்கி, கருக்குருவிக்கு உபதேசம் செய்தல், வேதத்திற்கு பொருள் அருளிச் செய்தல், நாரைக்கு முத்திக் கொடுக்கல், தருமிக்கு பொற்கிழி கொடுத்தல், சமணரை கழுவேற்றல், வன்னியும் கிணறும், லிங்கமும் அழைத்தல், மாணிக்கம் விற்றல், தண்ணீர் பந்தல் வைத்தல், அங்கம் வெட்டுதல், திருவாதவூர் அடிகட்கு உபதேசம் செய்தல், வளையல் விற்றல், குதிரை கயிறு மாறுதல், நரி பரியாகுதல், விறகு விற்றல், பிட்டுக்கு மண் சுமத்தல், திருக்கல்யாணம், சத்தா வர்ணம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஆகிய திருவிளையாடல் காட்சிகளுடன் நடைபெற்றது. நிறைவு நாளான சத்தா வர்ணம், பஞ்சமூர்த்தி புறப்பாட்டினை, மேலைச் சிவபுரி வாழ், பிள்ளையார் பட்டி கோயில், இரணிக்கோயில் நகரத்தார்கள் ஏற்று நடத்தினர். அன்றிரவு எஸ்.ஆர்.எம்.இராமலிங்க செட்டியார் தலைமையில் மேலை.பழநியப்பன் அறிமுக உரையாற்ற முனைவர் செல்வகணபதி ஐயா அவர்கள், ஆடல் காணிரோ ! என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இரவு மாவிளக்கு, மங்களப் பொருட்கள் ஏலத்திற்கு பின் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஊர் முழுவதும் நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரத்தார்கள், அருணாச்சல குருக்கள், சேகர் சிவாச்சாரியார், மங்கள இசை மாமணி பூமி நாதன் தலைமையில் மங்கள இசைக்குழுவினர் அதிகாலை 3 மணிக்கு துவங்கி, 9 மணிக்கு கோயிலை வந்தடைந்தனர். நடப்பு காரியக்காரர் ஆ.சொ.திருநாவுக்கரசு மண்டகப்படி பொறுப்புக் குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கோயில் பங்காளிகளும்,  பொறுப்பேற்று, விருந்துடன் நடத்தினர்.
கோயில் சிப்பந்திகள் ஒரு நாள் மண்டகப்படியும், சென்னை வாழ் மேலைச்சிவபுரி நகரத்தார்கள் ஒரு நாள் மண்டகப்படியும், சில உபயதாரர்கள் சார்பில் சில மண்டகப்படிகளும், சிறப்பாக நடத்தப்பட்டதுசெய்தி - மேலை - பழநியப்பன் - கரூர் 

No comments:

Post a Comment